IPL: பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெயில் நீக்கமா?.. கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம்..!

14
151

பஞ்சாப் அணி தன்னுடைய முதல் போட்டியில் டெல்லி அணியிடம் சூப்பர் ஓவரில் தோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியில் பஞ்சாப்அணி வீரர் மயங்க் அகர்வால் 89 ரன்களை அடித்தார்.

இதையடுத்து பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் 132 ரன்கள் விளாசினார். ஐபிஎல் 2020 தொடரின் முதல் சதத்தையும் பதிவு செய்தார் கே.எல்.ராகுல்.

இந்நிலையில், பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில் எப்போது அணிக்கு திரும்புவார் என்று ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு கே.எல்.ராகுல் கூறுகையில், “சரியான நேரத்தில் கிறிஸ் கெயில் வருவார், கவலைப்படாதீர்கள். வீட்டிலேயே உட்கார்ந்திருப்பது கடினமாக இருந்தது. ஆனால், இப்போது விளையாடும் வாய்ப்பை பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தாலும், அணி வீரர்கள் இந்த தருணத்தை அனுபவித்து வருகின்றனர்” என்று பேசினார் கூறினார்.

பெங்களூரு அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு பேசிய கே.எல்.ராகுல், “இந்த வெற்றி மொத்த குழுவால் கிடைத்தது. இந்தப் போட்டியில் எங்களுக்கு வேறு சில திட்டங்கள் இருந்தன. பெங்களூரு அணியில் சிறந்த பேட்டிங் வரிசை இருப்பதை நாங்கள் அறிந்தோம். 2 முதல் 3 விக்கெட்டுகளை முன்னால் பெற வேண்டியிருந்தது. அதேநேரம் பேட்டிங்கில் ஆரம்பத்திலேயே ரன்கள் எடுப்பதையும் குறிவைத்தோம். பெங்களூரு அணி வீரர்கள் செட் ஆகிவிட்டால் என்ன செய்வார்கள் என்று எங்களுக்குத் தெரியும்” என்று கூறினார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

14 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here