ஐநா அவையின் மனித உரிமை கூட்ட தொடரில் நாம் தமிழர் கட்சி வாதம்!!!

14
209

ஜெனீவா : ஐநா சபை ஜெனீவாவில் நடந்து கொண்டிருக்கும் 43-வது மனித உரிமை கூட்டத்தொடரில் நாம் தமிழர் கட்சியின் ஐநா பிரதிநிதிகள் ஜீவா மற்றும் ஹுமாயுன் தமிழ் இனப்படுகொலைக்கு எதிராகவும், குடியுரிமைச்சட்ட திருத்தத்திற்கு எதிராகவும் கடும் வாதங்களை முன் வைத்தனர். அதன் முழு விபரம் :

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக ஜீவா உரை:

ஐநா தலைவர் அவர்களே,

தமிழ் இனப்படுகொலையில் காணாமல் ஆக்கப்பட்ட 20,000க்கும் அதிகமான தமிழர்களும் (59 குழந்தைகள் உட்பட) இறந்து விட்டதாக இலங்கை புதிய ஜனாதிபதி கூறியுள்ளார். பல ஆயிரம் தமிழ் படைவீரர்கள் சரணடைய போகும் போதும் சரணடைந்த பின்னரும் இலங்கை படையால் கொல்லப்பட்டனர் என்பது அறிந்த விடயம். இலங்கை அரசு அது சம்பந்தமான காணொளி ஆதாரம், தடயவியல் ஆதாரங்களை மறுத்தது.

போரின் பின்னரும் ராஜபக்சாவிற்கும் அவரது சகோதரருக்கும் பிடிக்காத அனைத்து வர்த்தகர்கள் , பத்திரிகையாளர்கள் , மனித உரிமை ஆர்வலர்கள் காணாமல் ஆக்கப்பட்டதுடன் இதுவரை அவர்களை காண முடியவில்லை.

ஐநாவின் 40/1 தீர்மானத்திலிருந்து இலங்கை தற்போது வெளியேறிய நிலையில் ஐநாவும், இலங்கையும் சில கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது . யாரெல்லாம் கொல்லப்பட்டார்கள்?. எங்கே கொல்லப்பட்டார்கள்?. யார் யாரால் கொல்லப்பட்டார்கள்?. கொல்லப்பட்டவர்கள் அனைவருமே இலங்கை அரசிடம் சரண்டைந்தவர்கள். இந்த தமிழர்கள் இறந்து விட்டனர் என கூற ஏன் இலங்கை அரசிற்கு 10 ஆண்டு காலம் பிடித்தது .

இலங்கை இனப்படுகொலைக்கு பின்னால் இதுவரை கணக்கில் வராத தமிழர்கள் எண்ணிக்கை 146,679. ஆக மீதி 126,679 தமிழர்கள் நிலை என்ன என்ற கேள்விக்கு இலங்கை அதிபர் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.

72 ஆண்டுகால விடுதலை பெற்ற இலங்கை நாட்டின் வரலாற்றில் சிங்கள தலைவர்கள் தமிழர்களுக்கு எந்த ஒரு அரசியல் தீர்வையும் முன் வைக்கவில்லை . ஆகவே சர்வதேச சமூகம் தமிழர்களை அழித்தொழிக்கும் இலங்கை அரசின் நிலையை புரிந்து கொண்டு இனிமேலும் தாமதிக்காமல் உடனடியாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு அனுப்புவதோடு, தலையீடற்ற பன்னாட்டு விசாரணைக்கு அனுப்பி தமிழ் இனப்படுகொலைக்கு நீதி வழங்க கடுமையாக வலியுறுத்துகிறோம். நன்றி

குடியுரிமைச்சட்ட திருத்தத்திற்கு எதிராக ஹூமாயூன் அவர்கள் உரை:

ஐநா தலைவர் அவர்களே,

குடியுரிமை சட்ட திருத்தத்தை செயல்படுத்துவதன் மூலம் இந்தியா அனைத்து சர்வதேச சட்டங்களையும் மீறியுள்ளது. இச்சட்டத்தின் படி இந்தியாவில் 1983 முதல் அகதிகளாக வாழும் தமிழர்களுக்கு குடியுரிமை தகுதி இல்லை. அதில் பலர் தமிழக பூர்வகுடிகள்.

மதம் , சாதி , நம்பிக்கை மற்றும் பாலியல் வேறுபாடு பார்க்காமல் அகதிகளை பாதுகாக்கும் கடமை இந்தியாவிற்கு உண்டு . CAA விற்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் பதிவேட்டிற்கும் தொடர்பு உண்டு. இது இந்தியாவின் இஸ்லாமியர் , தலித்துக்கள் மற்றும் பூர்வகுடிகளை குறிவைத்து கொண்டுவரப்பட்டது.

மதச்சார்பற்ற இந்திய அரசியல் சாசனம் மத அடிப்படையிலான பாகுபாட்டை மறுக்கிறது. இந்திய அரசியல் சாசனத்தின் படி சட்டவிரோதமாக உள் நுழைந்தவர்கள் குடியுரிமைக்கு தகுதி இல்லாதவர்கள் என கூறுகிறது. மத அடிப்படையிலான இச்சட்டம் உடனே களையப்பட வேண்டும்.

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணையம் இட்ட வழக்கை வரவேற்கிறோம். குடியுரிமை சட்ட திருத்தத்தை இந்திய அரசு கைவிட கடுமையாக வலியுறுத்துகிறோம். நன்றி

இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஐநா அவையில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

14 COMMENTS

 1. Excellent goods from you, man. I have understand your stuff previous to and you’re just extremely magnificent.
  I really like what you’ve acquired here, certainly
  like what you’re stating and the way in which you say it.

  You make it entertaining and you still take care
  of to keep it smart. I cant wait to read far more from
  you. This is really a tremendous site.

 2. This is really interesting, You are a very skilled blogger.
  I have joined your feed and look forward to seeking more of your wonderful
  post. Also, I’ve shared your site in my social networks!

 3. This is very attention-grabbing, You are an excessively professional blogger.
  I have joined your rss feed and look forward to
  seeking extra of your excellent post. Additionally, I’ve shared your site in my social networks

 4. Hey would you mind letting me know which webhost you’re using?
  I’ve loaded your blog in 3 different browsers and
  I must say this blog loads a lot quicker then most. Can you recommend a good web hosting provider at a fair
  price? Cheers, I appreciate it!

 5. Howdy just wanted to give you a quick heads up.

  The text in your content seem to be running
  off the screen in Firefox. I’m not sure if this is
  a format issue or something to do with web browser compatibility
  but I thought I’d post to let you know. The layout look great though!
  Hope you get the problem resolved soon. Thanks

 6. I believe that is among the such a lot significant information for me.

  And i’m satisfied reading your article. However should statement on some general things, The site taste
  is great, the articles is in point of fact nice : D. Just right activity, cheers

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here