20 ஆம் தேதி தூக்கு – நிர்பயா குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு¡ நிறைவேறுமா தூக்கு தண்டனை

0
81

டெல்லி : நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் 3 பேர் தரப்பில் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார். இதனால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங், ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் தாகூர், ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். பின்பு அந்த சிறுவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான்.

அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

கருணை மனு, சீராய்வு மனு என்று மனுக்கள் மேல் மனுக்கள் போட்டு 3 முறை தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. 4வது முறையாக இம்மாதம் (மார்ச்) 20ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிகளில் அக்‌ஷய், பவன், வினய் ஆகிய 3 பேர் முறையீடு செய்துள்ளனர். தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க கோரி சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Visit “minnalnews.com” for more news 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here