2-வது கட்டமாக மாற்றங்களுடன் நீட்டிக்கப்படும் லாக்-டவுன்? 3 பிரிவுகளாக மாநிலங்களை பிரிக்க மத்திய அரசு புதிய திட்டம்

0
64

டெல்லி : கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடைமுறையில் இருக்கும் 21 நாட்கள் லாக்டவுன் வரும் 14-ம் தேதிக்குப்பின் நீட்டிக்கப்படும் பட்சத்தில் அதில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதாவது, கரோனா வைரஸ் நோயாளிகள், பாதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்கள், மாவட்டங்களுக்கு ஏற்ப சிவப்பு மண்டலம், ஆரஞ்சு மண்டலம், பச்சை மண்டலம் என பிரித்து லாக்டவுனை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த 2-ம் கட்ட லாக்டவுனில் பொருளாதார சுழற்ச்சி பாதிக்கப்படாமல் இருக்க முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்தின்படி நாடுமுழுவதும் பள்ளி,கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். ஆனால், சில விதிவிலக்குகளுடன் சிறு, குறுந்தொழில்கள், மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன.

சிவப்பு மண்டலம்
இதன்படி சிவப்பு மண்டலத்தின் கீழ் வரும் மாநிலங்கள், அதாவது அதிகமான கரோனா நோயாளிகள் இருக்கும் மாநிலங்கள், மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு அவை ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்படும். இந்த மண்டலத்தில் போக்குவரத்து, கடைகள் திறப்பு, தொழிற்சாலை இயக்குதல், சிறு,குறுந்தொழில்கள், வர்த்தக நிறுவனங்கள் செயல்பாடு அனைத்துக்கும் தடை இருக்கும்

ஆரஞ்சு மண்டலம்
கரோனா நோயாளிகள் அடிப்படையில் மாநிலங்கள், மாவட்டங்களும் ஆரஞ்சு மண்டலத்தின் கீழ் கொண்டுவரப்படும். இதில் கடந்த காலத்தில் உருவான கரோனா நோயாளிகள் தவிர புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்றால், அது ஆரஞ்சு மண்டலத்தில் சேர்க்கப்படும்.

இந்த மண்டலத்தில் குறைந்த அளவுக்கு பொருளாதார பணிகள் செயல்பட அனுமதிக்கப்படும். அதாவது குறைந்த அளவு பொதுப்போக்குவரத்து, விவசாயப்பணிகள், சிறு,குறுந்தொழில்கள் செயல்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்

பச்சை மண்டலம்
கரோனா நோயாளிள் இல்லாத மாவட்டங்கள், மிகக்குறைவான மாநிலங்கள் பச்சை மண்டலத்தின் கீழ் கொண்டுவரப்படும். இங்கு அனைத்து விதமான போக்குவரத்து, கடைகள்திறப்பு, வர்த்தக நிறுவனங்கள் செயல்பாடு, சிறுகுறுந்தொழில்கள் செயல்பாடு ஆகியவற்றுக்கு அனுமதிக்கப்படும்.

இந்த மாவட்டங்களில் மதுக்கடைகளும் திறக்கப்பட முதல்வர்கள் மத்தியஅரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். பெரும்பாலான மாநிலங்கள் வரிவருமானம் ஈட்டித் தருவது மதுக்கடைகளாக இருப்பதால்அவை இந்த மண்டலத்தில் திறக்கப்படலாம்.ஆனால், ரெஸ்டாரண்ட், உணவகங்கள், ஷாப்பிங் மால்களுக்கு அனுமதியில்லை.

இந்த மண்டலத்தில் சிறு,குறுந்தொழில்கள், நடுத்தர நிறுவனங்களைச் செயல்பட அனுமதிக்கும் போது, தொழிலாளர்கள் சமூக விலகலை கடைபிடிக்க உத்தரவிடப்படும்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here