கொரோனா : கர்நாடகாவில் 10 மாத குழந்தை கொரோனாவால் பாதிப்பு… அதிர்ச்சி தகவல்..!!

299
1521

கர்நாடகா : கர்நாடகாவில் 10 மாத குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் இன்று ஒருநாள் மட்டும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் கர்நாடகாவில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை அங்கு 3 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர். 4 பேர் சிகிச்சை பலன்பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், 10 மாத குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலை கர்நாடக அரசு உறுதி செய்துள்ளது. அந்தக் குழந்தை வெளிநாடு எதுவும் கொண்டு செல்லப்பட்டு வந்ததாக தகவல்கள் இல்லை. முன்னதாக, அக்குழந்தையின் குடும்பத்தினர் மட்டும் கேரளா சென்று திரும்பியுள்ளனர். அந்தக் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை இருந்துள்ளன. இதன் காரணமாக கடந்த 23ஆம் தேதி மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்துள்ளனர்.

பின்னர், அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் மூலம் மார்ச் 26ஆம் தேதி குழந்தைக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. தற்போது அந்தக் குழந்தை உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மங்களூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

299 COMMENTS

  1. Greetings from Ohio! I’m bored at work so I decided to browse your website on my iphone during lunch break. I really like the info you provide here and can’t wait to take a look when I get home. I’m shocked at how quick your blog loaded on my phone .. I’m not even using WIFI, just 3G .. Anyways, fantastic blog!

  2. I will immediately seize your rss as I can not to find your e-mail subscription hyperlink or newsletter service. Do you’ve any? Kindly permit me recognise so that I may subscribe. Thanks.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here