வேட்பாளார் தேர்வில் தீவிரம் காட்டும் சீமான்

2
566

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி 10% வாக்குகளை பெற்றது. இது அந்த கட்சியினருக்கு புதிய உற்சாகத்தை கொடுத்தது. கட்சியினரின் உற்சாகத்தை பார்த்த சீமான், சூட்டோடு சூடாக 2021 ல் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

முதலில் உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட கவன்சிலர்கள் பெற்ற வாக்குகளை சேகரிக்க அனைத்து தொகுதி செயலாளர்களுக்கும் உத்தரவு இட்டுள்ளார் (நாம் தமிழர் கட்சி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ளது). இவர்கள் ஒவ்வொரு ஒன்றியத்திலும் எந்த கட்சி எத்தனை வாக்குகளை வங்கியது என்ற பட்டியலை தயாரித்து வருகிறார்கள். அது மட்டுமில்லாது தொகுதியின் முக்கிய நபர்களிடம் தொலைபேசி வாயிலாகவும் விவரங்களை கேட்டு வருகிறார்.

எப்படியாவது அடுத்த சட்டமன்ற தேர்தலில் கட்சிக்கான அங்கீகாரத்தை பெற்றுவிட வேண்டும் அதற்கான வேலை திட்டங்களை கட்சின் முக்கிய நிர்வாகிகளிடம் ஒப்படைத்துள்ளார். இதன் அடிப்படையில் எந்த தொகுதி பெண்களுக்கு எந்த தொகுதி ஆண்களுக்கு என்று முடிவு செய்வார்கள். சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் தொகுதி நிர்வாகிகளுக்கு புதிய வேலை திட்டத்தையும் கொடுத்து இருக்கிறார்.

சீமானின் அதிரடியால் கட்சியினர் சுறுசுறுப்புடன் பணிகளை தொடங்கியுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதா அல்லது இந்த ஆண்டு மே மதம் நடக்கும் மாநில மாநாட்டில் வெளியிடுவதா என்று தனக்கு நெருங்கிய அரசியல் ஆலோசகர்களிடம் கேட்டிருக்கிறார் சீமான். சீமான் செயல்படும் வேகத்தை பார்க்கும் போது, அதிகாரம் வெகு விரைவில் அவர் கையில் சிக்கும் என்றே அரசியல் நோக்கர்கள் கணிக்கிறார்கள்.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here