விவசாயி-க்கு கிடைத்த முதல் வெற்றி

138
1545

தமிழகத்தில் கருத்தியல் ரீதியாக இயங்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும் தான். தமிழக மக்களுக்கு ஒரு மாற்று அரசியலை வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறது. இரண்டு தேர்தல்களை சந்தித்து தமிழகத்தில் ஒரு அதிர்வை உருவாக்கி இருந்தது நாம் தமிழர். நீண்ட காலமாக திராவிட அரசியல் கட்சிகளின் பிடியில் இருக்கும் தமிழகத்தில் ஒரு நம்பிக்கை ஒளி கீற்றை ஏற்படுத்தியது நாம் தமிழரின் வரவு. ஆனாலும் தேர்தல் வெற்றி என்று பார்த்தால் இதுவரை எதுவும் இல்லை. இந்த நிலையில் தற்போது இரண்டு கட்டங்களாக நடத்த தமிழ் நாடு உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி தன்னுடைய முதல் வெற்றியை பெற்றுள்ளது. கன்னியாகுமாரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 11 வது வார்ட் கவுன்சிலராக நெ சுனில் வெற்றி பெற்றுள்ளார். இதை நாம் தமிழர் கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள்.

இது ஒரு சாதாரண வெற்றியாக இருந்தாலும் நாம் தமிழரைப் பொறுத்த வரையில் “நீல் ஆம்ஸ்டராங் நிலவில் கால் வைத்ததற்கு சமமானது, அது ஒரு சிறிய காலடி தடமாக இருந்தலும் மனித வரலாற்றில் மிக பெரிய பாய்ச்சல்”. அது போல இது ஒரு சிறிய வெற்றி என்றாலும் தமிழ் தேசிய வரலாற்றில் இது மிகப் பெரிய பாய்ச்சலாக பார்க்கிறார்கள் நாம் தமிழர்.

இந்த உற்சாகம் 2021 வர இருக்கிற சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கலாம் என்பதால் நாம் தமிழரின் இந்த வெற்றி மற்ற கட்சிகளுக்கு ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த  வெற்றி நாம் தமிழரை வெகுவாக உற்சாக படுத்தியுள்ளது .

138 COMMENTS

  1. I will right away take hold of your rss as I can not find your e-mail subscription hyperlink or newsletter service. Do you’ve any? Kindly permit me realize in order that I may subscribe. Thanks.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here