விஜய்யை எம்.ஜி.ஆர் போல சித்தரித்து விளம்பரம்: அப்செட் ஆன அமைச்சர் கடம்பூர் ராஜு

13
119

விடுதலைப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 149-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் உள்ள அவருடைய நினைவு இல்லத்தில் வ.உ.சிதம்பரனாரின் முழு உருவ சிலைக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஓடிடி-யில் திரைப்படங்கள் வெளியிடுவது என்பது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லாதது என்று தெரிவித்தார். தற்போது ஓடிடி-ல் வெளியிடப்பட்டு வரும் திரைப்படங்கள், வெப் சீரியல் உள்ளிட்டவைகளுக்கு கேளிக்கை வரி விதிப்பது தொடர்பாக வழிகாட்டுதல்களையும் நெறிமுறைகளையும் மத்திய அரசு தீர்க்கமாக முடிவு செய்தால் அதை தமிழக அரசு நடைமுறைப்படுத்தும் என அவர் தெரிவித்தார்.

நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஒட்டி வரும் போஸ்டர்கள் குறித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, “எம்ஜிஆர் என்றென்றைக்கும் போற்றப்படுகின்ற தலைவர். நடைமுறையில் இன்றைக்கும் மக்கள் மனதில் அழிக்க முடியாத தலைவராக இருக்கிறார். மக்கள் மனதில் அழியா இடம் பிடிப்பதற்கு எம்ஜிஆர் போல இருக்க வேண்டும் என்ற ஆசையின் காரணமாக நடிகர் விஜய்யை எம்.ஜி.ஆர். போல சித்தரித்து விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

தேர்தல் வரும் சமயத்தில் ஆயிரம் பேர் முதல்வர் வேட்பாளர் என கூறிக்கொண்டு வருவார்கள். ஆனால் 2021 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக தலைமையிலான ஆட்சிதான் தமிழகத்தில் அமையும். அதில் மக்கள் தெளிவாக உள்ளார்கள்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

13 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here