விஜயகாந்த் கல்லூரியில் உடலை புதைக்க தரமுடியாது… ஆனால் சட்டப்படி ஒன்றை செய்யலாம் விஜயகாந்த் – சிறப்பு கட்டுரை

30
263

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு இது!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை அடுத்த மாவிலைத்தோப்பில் இருக்கும் நாடார் நடுநிலைப்பள்ளி வளாகத்தில், சின்னசாமி நாடார் என்பவரின் உடல் 2005 ஜனவரி 13-ம் தேதி புதைக்கப்படுகிறது. “எங்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தில் விதிகளை மீறி சின்னசாமி நாடார் என்பவரின் உடலை அடக்கம் செய்திருக்கிறார்கள். இதனால், மாணவர்கள் விளையாடுவதற்குப் பயப்படுகிறார்கள். புதைக்கப்பட்ட உடலை அப்புறப்படுத்தி, மயானத்தில் புதைக்க வேண்டும். மேற்கொண்டு யாரையும் இந்தப் பள்ளி வளாகத்தில் புதைக்க அனுமதிக்கக் கூடாது” எனப் பள்ளியின் கரஸ்பாண்டட் ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போடுகிறார்.

ராமநாதபுரம் கலெக்டர், ஆர்.டி.ஓ உள்ளிட்ட அதிகாரிகளை எல்லாம் வழக்கின் எதிர் மனுதாரராகச் சேர்த்திருந்தார் ரமேஷ். சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நீதிபதி சந்துரு முன்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது.

“உடல் புதைக்கப்பட்ட இடம் சின்னசாமி நாடாரின் சொந்த நிலம். ஏற்கெனவே அவரின் மனைவியும் அங்கே புதைத்திருக்கிறார்கள். பள்ளிக்கு அருகில்தான் அந்த நிலம் இருக்கிறது. தனிப்பட்டவரின் நிலம் அது. பள்ளிக்கூடத்துக்கும் அந்த நிலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதிட்டது. இந்த வழக்கில் 2007 ஆகஸ்ட் 28-ம் தேதி தீர்ப்பு எழுதினார் நீதிபதி சந்துரு.

நீதிபதி சந்துரு

“தனிப்பட்ட நிலமாக இருந்தாலும் அல்லது அறக்கட்டளை மூலம் உருவாக்கப்பட்ட நிலமாக இருந்தாலும் அந்த இடத்தில் எந்த உடலையும் புதைக்க முடியாது. அது கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும். அப்படிப் புதைக்கப்படுகிறவர் கல்வி நிலையத்துக்குப் பாடுபட்ட மனிதராக இருந்தாலும்கூட அவரை அங்கே புதைக்க அனுமதியில்லை. பஞ்சாயத்துச் சட்டம் பிரிவு 116-ன் படி ஒரு மயானத்தை உருவாக்குவதும் அல்லது மூடுவதும் அந்தப் பஞ்சாயத்தின் தீர்மானத்துக்கு உட்பட்டது. அந்தத் தீர்மானத்தை அரசு அங்கீகாரம் செய்யும். பிணங்களைப் புதைக்கவோ எரிக்கவோ மயானங்கள் இருக்கும்போது, இறந்தவரின் உடலை அவருக்குச் சொந்தமான நிலத்திலோ வீட்டுப் பகுதியிலோ புதைப்பதற்கும் எரிப்பதற்கும் சட்டம் இடம் அளிக்கவில்லை. இறந்தவர்களின் உறவினர்கள் சொல்லும் இடங்களில் எல்லாம் பிணங்களைப் புதைக்கவும் எரிக்கவும் முடியாது.

அனைவரும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டுத்தான் இருக்க வேண்டும். அது இறந்து போன உடலாக இருந்தாலும்கூட. அவையும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டதுதான். ஏற்கெனவே மனைவியைப் புதைத்திருக்கிறோம் எனச் சொல்லி, அங்கே இன்னொரு உடலைப் புதைப்பதும் தவறு. அதனை அதிகாரிகள் அனுமதித்ததும் குற்றம். இனியும் அப்படித் தொடரக் கூடாது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட மயானத்தில்தான் உடல்களைப் புதைக்கவோ எரிக்கவோ வேண்டும்” எனத் தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி சந்துரு.

தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1996 பிரிவு 242-ன் கீழ் விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி 5.10.1999 அன்று ஊரக வளர்ச்சித் துறை அரசாணை எண் 213-னை வெளியிட்டது. மயானம் தொடர்பாக 7 விதிகள் அதில் சொல்லப்பட்டிருந்தன. இதன்படி எந்த இடம் மயானம் என முடிவு செய்யப்படுகிறதோ அந்த இடத்தில்தான் உடல்களைப் புதைக்கவும் எரிக்கவும் செய்ய வேண்டும். அப்படி மீறிச் செய்தால் 100 ரூபாய் அபராதம் – புதைக்கப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் தனியாக அபராதம் – விதிக்கப்படும். அதோடு சிறைத் தண்டனையும் உண்டு. இதைத் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியிருக்கிறார் நீதிபதி சந்துரு.

இந்தக் கதையெல்லாம் இப்போது எதற்கு?

கொரோனாவால் உயிர் இழந்த டாக்டர் சைமன் ஹெர்குலிஸ் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த விவகாரத்தில், “கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால். ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துக்கொள்ளலாம்” என விஜயகாந்த் சொன்னபோது பொது வெளியிலும் சமூக வலைதளங்களிலும் அவருக்குப் புகழ் மாலைகள் சூட்டப்பட்டன. கீழக்கரை பள்ளி மயான வழக்கின் தீர்ப்பின்படி, விஜயகாந்த்தின் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை மயானமாகப் பயன்படுத்தவே முடியாது. கொரோனா காலத்தில் இமேஜை ஸ்கோர் செய்ய தே.மு.தி.க அடித்த ஸ்டன்ட் இது.

கீழக்கரை மயான வழக்கை நமது கவனத்துக்குக் கொண்டு வந்த முன்னாள் ராஜ்யசபா எம்.பி-யும் மூத்த வழக்கறிஞருமான ஜோதியிடம் பேசினோம். “ஒவ்வொரு தனி மனிதனின் செயல்பாடுகள் அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டதுதான். தற்கொலை செய்து கொள்ளக்கூடத் தனிமனிதனுக்கு உரிமை கிடையாது. `நான் தனி மனிதன் எது வேண்டுமானாலும் செய்து கொள்வேன்’ என எவரும் சொல்ல முடியாது. சட்டத்திற்குக் கட்டுப்பட்டவன்தான் தனி மனிதன். அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை தத்துவம் இது. அது விஜயகாந்த்துக்கும் பொருந்தும்.

சென்னை மாநகராட்சி சட்டத்தின் பிரிவு 319 முதல் 356 வரை தொற்று வியாதிகள் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது. தொற்று வியாதியால் ஒருவர் இறந்துவிட்டால் அவரை எங்கே, எப்படி அடக்கம் செய்ய வேண்டும்; எவ்வளவு ஆழத்தில் புதைக்க வேண்டும்; சமாதிகள் கட்டுவதாக இருந்தால் எவ்வளவு உயரத்தில் கட்ட வேண்டும்;. அதற்கான வழிமுறைகள் பற்றியெல்லாம் சட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இப்படித்தான் நகராட்சிகள், ஊராட்சிகளின் சட்டங்களிலும் இதுபற்றி பிரிவுகள் இருக்கின்றன. அதற்கான விதிமுறைகளும் உண்டு.

ஒவ்வொரு மதத்தினரும் உடல்களைப் புதைப்பதற்கும் எரிப்பதற்கும் வேறுபாடுகள் உண்டு. அதற்குத் தகுந்தாற் போல இடுகாடு, சுடுகாடு, தகன மேடை என மயானங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அப்படி உருவாக்கப்பட்டும் மயானங்கள் எப்படி அமைய வேண்டும்; சுற்றுச் சுவர் இருக்க வேண்டும்; நீளம், அகலம் எவ்வளவு; பாதுகாப்பு எப்படி என அனைத்து அம்சங்களையும் சட்டம் வரையறுத்திருக்கிறது. இதற்குப் பிறகுதான் மயானம் அமைக்க அரசு அனுமதி அளிக்கும். நினைத்த உடன் ஒரு மயானத்தை உருவாக்கி விட முடியாது.

ஆண்டாள் அழகர் கல்லூரியும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளும் விஜயகாந்த்துக்குச் சொந்தமானது அல்ல. அது அறக்கட்டளைக்கு உட்பட்டது. அறக்கட்டளைகள் மூலம்தான் கல்வி நிலையங்கள் தொடங்கப்படும். கல்வி நிலையங்கள் அனைத்தும் பொது நிறுவனங்கள்தான். மத்திய அரசின் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுவால் (AICTE) அங்கீகரிக்கப்பட்ட வளாகம்தான் ஆண்டாள் அழகர் கல்லூரி. அந்த வளாகத்தில் என்னவெல்லாம் உண்டு என்பது AICTE கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட பிறகுதான் பொறியியல் கல்லூரிக்கு அனுமதி தரப்படும். கல்வி அல்லாத பணிகள் அங்கே இருக்கக் கூடாது.

அந்தக் கல்வி வளாகத்துக்குள் தொழிற்சாலை அமைக்கிறேன் என யாராவது முற்பட்டால் அதுவும் முடியாது. வேறு அலுவலகமும் இயங்க முடியாது. கல்வி தொடர்பான விஷயங்கள் மட்டுமே அந்த வளாகத்தில் அனுமதிக்கப்படும். `ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துக் கொள்ளலாம்’ என விஜயகாந்த் சொன்னாலும் சட்டப்படி அங்கே உடல்களைப் புதைக்க முடியாது” என்றார் ஜோதி.

வழக்கறிஞர் ஜோதி

ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துக்கொள்ளலாம் என விஜயகாந்த் சொன்னது விளம்பரம் தேட அல்ல; ஆத்மார்த்தமாகச் செய்ய நினைத்த உதவியென்றால் விஜயகாந்த்துக்கு ஒரு யோசனை.

விஜயகாந்த்துக்கும் அவரது மனைவி பிரேமலதாவுக்கும் சொந்தமாக வேளாண்மை அல்லாத நிலங்கள் நிறைய இருக்கின்றன. சென்னை கோயம்பேடு (சர்வே எண் 125), குன்றத்தூர் (சர்வே எண் 7/1, 7/3), காட்டுப்பாக்கம் அட்கோ நகர் (சர்வே எண் 180/2A1B) ஆகிய பகுதிகளில் விஜயகாந்த்துக்குச் சொந்தமாக மொத்தம் 2,40,002 சதுர அடி நிலங்கள் இருக்கின்றன. இதே போல பிரேமலதாவுக்குக் கோயம்பேடு சர்வே எண் 125/3A-ல் 21 சென்ட் நிலமும் சர்வே எண் 125/3A-ல் 7 சென்ட் நிலமும் உள்ளது. இதில் ஒரு பகுதியை மயானத்துக்காக அரசிடம் அளிக்கலாம். அங்கே கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கலாம்.

சட்டப்படி செய்யுங்கள் கேப்டன்!

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

30 COMMENTS

 1. Simply wish to say your article is as surprising.
  The clearness in your post is just nice and i can assume you’re an expert on this subject.
  Well with your permission allow me to grab your feed to keep updated with forthcoming
  post. Thanks a million and please continue the gratifying work.

 2. Hey There. I found your blog using msn. This is an extremely well
  written article. I will make sure to bookmark it and come
  back to read more of your useful info. Thanks for the post.
  I’ll certainly comeback.

 3. This is really interesting, You’re a very skilled blogger.

  I’ve joined your feed and look forward to seeking more of
  your wonderful post. Also, I’ve shared your website in my social
  networks!

 4. I really like your blog.. very nice colors & theme. Did you
  make this website yourself or did you hire someone to do it
  for you? Plz answer back as I’m looking to design my own blog and would like to know where u got this from.

  kudos

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here