வருகிறது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் திரைப்படம்!

0
78

சென்னை : விளம்பரப் படங்களின் மூலம் மக்களிடம் பிரபலமான அருள் அண்ணாச்சி, மீம்ஸ்களின் ஹீரோவாக மாறி கலக்கி வருகிறார். அவரை விளம்பரத்தில் ஜொலிக்க வைத்த இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி சினிமாவிலும் ஹீரோவாக்கி புதிய படத்தை இயக்கி வருகிறார்கள். ஊரடங்கு முடிந்ததும் படப்படிப்புப் பணிகள் பரபரப்பாகத் தொடங்கிவிடும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய இயக்குநர்கள், மக்களிடம் அண்ணாச்சி நடித்த விளம்பரங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்றும், ஷோரூம் விளம்பரங்களுக்கு ஒரு முகத்தைத் தேடியபோது நானே முயற்சி செய்கிறேன் என்று அவர் கூறியதாக தெரிவித்தனர். தற்போது உருவாகி வரும் படம் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கும் இணையாக, நீங்கள் எதிர்பார்க்காத படமாக இருக்கும் என்றும் மீம்ஸ் கிரியேட்டர்கள்தான் படத்தைப் பிரபலப்படுத்தினார்கள்.

அதன் வெற்றிக்கும் அவர்களே காரணமாக இருக்கப் போகிறார்கள் என கூறியுள்ளனர். மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பதில் கொடுக்கப்போகிற படமாக இருக்கும் எனவும் இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி தெரிவித்துள்ளனர்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here