வனிதாவிடம் போலீசார் நடந்திய தீவிர விசாரணை.. சிக்கலில் சிக்கப்போவது யார்?

0
53

சென்னை : வனிதாவின் மூன்றாவது திருமணம் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், வனிதா மற்றும் சூரியா தேவி ஆகிய இருவரும் வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.

பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், பீட்டர் பால் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக போலீசில் புகாரளித்திருந்தார்.

இதையடுத்து பலரும் இத்திருமணம் குறித்து சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.

அதில் சூர்யா தேவி என்பவர் தொடர்ந்து தன் மீது அவதூறு பேசி வீடியோ வெளியிட்டு வருவதாக போரூர் காவல் நிலையத்தில் இரண்டு முறை வனிதா புகாரளித்திருந்தார்.

அவரை தொடர்ந்து, வனிதா விஜயகுமார் தன்னைப் பற்றி அவதூறாக பேசி வருவதாக சூர்யா தேவி, வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்திருக்கிறார்.

இதேவேளை, இருவரின் புகாரின் அடிப்படையில் இரண்டு தரப்பினரிடமும் வடபழனி அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கும் நிலையில் வனிதா பிரச்சினையை பலர் பெரிதுப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக வனித தற்போது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளார். அடுத்த சிக்கலில் சிக்குவது யார் என்று பார்ப்போம்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here