ராஜ்யசபா தேர்தல்: விஜயகாந்த் வெளியே, ஜிகே வாசன் உள்ளே – கடுப்பில் பிரேமலதா

0
76

சென்னை: ராஜ்யசபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கே.பி.முனுசாமி, தம்பிதுரை, ஜி.கே.வாசன் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் இருந்து, ஆறு ராஜ்யசபா, எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

இதற்கான தேர்தல், வரும், 26ம் தேதி நடக்கிறது. சட்டசபையில் கட்சிகளுக்கு உள்ள பலம் அடிப்படையில், அ.தி.மு.க., தி.மு.க., சார்பில், தலா மூன்று பேரை தேர்ந்தெடுக்க முடியும்.தி.மு.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், அதிமுக சார்பிலான ராஜ்யசபா எம்.பி., பதவிக்கான வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது.

அதன்படி, அதிமுக.,வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, லோக்சபா தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ஜி.கே.வாசன் கூறுகையில், 3 இடங்களில் கூட்டணி கட்சியான த.மா.கா.,வுக்கு ஒரு இடம் ஒதுக்கிய முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோருக்கு நன்றி. தொடர்ந்து ஆக்கப்பூர்வமான கருத்துகளை தமிழக அரசுக்கு அளித்துள்ளோம். தமிழகம் மற்றும் மாநில அரசின் நலனுக்காக மத்திய, மாநில அரசுக்கு இடையே பாலமாக செயல்பட்டு திட்டங்கள், நிதிகள் பெறுவேன் என்றார்.

தேமுதிக.,வுக்கு மறுப்பு ராஜ்யசபா தேர்தல் குறித்த அறிவிப்பு வெளிவந்த நாள் முதல் அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக., தங்களுக்கு ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வந்தன. கூட்டணி உடன்படிக்கையின் போதே ராஜ்யசபா வாய்ப்பு பற்றி முடிவு செய்துள்ளோம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறி வந்தார். மேலும், இது குறித்து அக்கட்சியின் எல்.கே.சுதீஷ், துணை முதல்வர் ஓபிஎஸ்.,ஐ சந்தித்தும் வலியுறுத்தினார். இந்நிலையில், தேமுதிக.,வின் கோரிக்கைகளை நிராகரித்து மற்றொரு கூட்டணி கட்சியான த.மா.கா.,வுக்கு வாய்ப்பளித்தது தேமுதிக.,வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here