ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் 12,000 ரன்கள் அடித்து அசத்திய வீரர்

0
119

நாக்பூர் : மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டியில் விதர்பா அணி வீரர் வாசிம் ஜாபர் 12,000 ஆயிரம் ரன்களை அடித்து சாதனை புரிந்துள்ளார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

ரஞ்சி கோப்பை எலைட் குரூப் ஏ மற்றும் பிக்கு இடையிலான போட்டி நாக்பூரின் விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கேரள அணிக்கு எதிராக விதர்பா அணி சார்பில் களமிறங்கிய வாசிம் ஜாபர் 12 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.

சாதனைகளை முறியடித்தவர்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் விளையாடி கடந்த 2018 நவம்பரில் 11,000 ரன்களை கடந்த அமோல் மசூம்தாரின் சாதனையை தற்போது ஜாபர் முறியடித்துள்ளார். ஜனவரியில் தனது 146வது போட்டியில் விளையாடியதன்மூலம் மத்திய பிரதேசத்தின் தேவேந்திர பண்டேலோவின் 145 போட்டிகள் என்ற சாதனையை இவர் முறியடித்தார். தற்போது 150 போட்டியை கடந்து ரஞ்சியில் அதிக போட்டிகளை விளையாடிய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இவர் தட்டி சென்றுள்ளார்.

ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்து அதன்மூலம் இந்திய அணியிலும் இடம்பெற்றவர் வாசிம் ஜாபர். இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 2 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் இவர். மும்பை மற்றும் விதர்பா அணிகளுக்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாடி வருபவர். கேரளாவிற்கு எதிரான போட்டியில் முதல் 4 ரன்களில் விதர்பா அணி முதல் விக்கெட்டை இழந்த நிலையில் ஜாபர், அந்த அணியின் ஸ்கோரை தூக்கி நிறுத்தினார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here