ரஜினியின் கோரிக்கை ஏற்பு..

10
153

தூத்துக்குடி: நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்ட ரஜினியின் கோரிக்கையை ஏற்றது தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தும் அருணா ஜெகதீசன் ஆணையம்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணைய அதிகாரி மாதம்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி, ஏற்கனவே 18 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வக்கீல்கள், பத்திரிகையாளர்கள் உள்பட 445 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. 630 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30-5-2018 அன்று தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து, துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மக்கள் 100 நாட்கள் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நடந்த போராட்டத்தில், கலெக்டர் அலுவலகம், குடியிருப்பு எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சாமானிய மக்கள் கிடையாது. நிச்சயமாக விஷகிருமிகள், சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து உள்ளனர். இந்த புனிதமான போராட்டம் கூட ரத்தக்கறையுடன் முடிந்து உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதனால் அவருக்கு ஒருநபர் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது. ஆனால், ரஜினிகாந்த் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு கோரி ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினார்.

இந்த நிலையில், ரஜினியின் கோரிக்கையை விசாரணை ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. ரஜினியிடம் கேட்க வேண்டிய கேள்விகளை சீலிடப்பட்ட உறையில் வைத்து அளித்திருப்பதாக ரஜினிகாந்தின் வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

10 COMMENTS

 1. We are a group of volunteers and opening a brand new scheme
  in our community. Your website provided us with valuable info to work on. You have
  performed a formidable activity and our entire neighborhood will likely be thankful to you.

 2. Do you mind if I quote a couple of your posts as long as I provide
  credit and sources back to your website? My blog site is in the very same niche as yours and my users would certainly benefit from some of the information you provide here.

  Please let me know if this alright with you. Many thanks!

  cheap flights 34pIoq5

 3. Hmm it appears like your blog ate my first comment (it was
  extremely long) so I guess I’ll just sum it up what I had
  written and say, I’m thoroughly enjoying your blog. I too am an aspiring blog blogger but I’m still new to everything.
  Do you have any points for novice blog writers?
  I’d genuinely appreciate it.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here