ரசிகர்களின் வெறித்தனம்.. தமிழகத்தில் பட்டையை கிளப்பும் விஜய் போஸ்டர்!: பெரும் பரபரப்பு

0
36

தளபதி விஜய் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதியான நாளை வருவதை அடுத்து அவரது ரசிகர்கள் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட தகுந்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பிறந்த நாள் போஸ்டர்கள் உள்பட எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் இந்த நான்கு மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் விஜய் ரசிகர்கள் சுறுசுறுப்பாக போஸ்டர் ஒட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உடன் ஒப்பிட்டு சில போஸ்டர்கள் தஞ்சையில் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரில் தமிழகத்தின் ஜெகந்நாதரே என குறிப்பிடப்பட்டுள்ளதால் அதிமுக வட்டாரத்த்ஹில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் மதுரையில் கபசுரரே என்று அடைமொழியுடன் கூட போஸ்டரும் திருச்சியில் கடவுள் என்று அடைமொழியுடன் கூடிய போஸ்டரும் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தூங்கா நகரமான மதுரையில் ஒட்டப்பட்டிருந்த மேலும் ஒரு போஸ்டரில் ‘அண்ணன் பேச்சு எப்பவும் இருக்கும் கருத்தா, அவருக்கு நாங்கள் எப்பவும் நிற்போம் உறுத்தா’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் விஜய் பிறந்தநாளை ஒட்டி அடைமொழியுடன் கூடிய போஸ்டர்களை ஆங்காங்கே சர்ச்சைக்குரிய வார்த்தைகளுடன் ஒட்டப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் நிலையில் தற்போதைக்கு அரசு இதனை கண்டுகொள்ளாமல் இருந்தாலும் பின்னாளில் இதனை நினைவில் வைத்து விஜய் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here