மே 28 – ம் தேதி வரை 144 தடை நீடிப்பு !! சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவிப்பு..

0
63

சென்னை : கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் போராட்டங்கள், உண்ணாவிரதம் நடத்த , 144 தடை உத்தரவு மே 17-ம் தேதி வரை இருந்தது. இதற்கான அறிவிப்பை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் ஏற்கனவே வெளியிட்டிருந்தார்.

இந்த தடை உத்தரவை மீறுபவர்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் ஆணையாளர் எச்சரித்திருந்தார். இந்நிலையில், நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிக்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் இன்று மீண்டும் புதிய உத்தரவு ஒன்றை சென்னை காவல் ஆணையர் பிறப்பித்தார். அதில் மே 28ம் தேதி வரை தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பொது இடம், போக்குவரத்து பகுதி, சாலை, தெருவில் மே 13 வரை இருந்த தடை தற்போது மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here