மூலப் பத்திரம் காட்டச் சொன்ன பாமக … ஆபாசப் படம் காட்டிய திமுக எம்.பி..!

4
121

முரசொலி மூலப்பத்திரம் காட்டச்சொன்ன பாமக ஆதரவாளருக்கு ஆபாச போட்டோக்களை பதிவிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார் தி.மு.க எம்.பி செந்தில் குமார்.

தர்மபுரி தொகுதி திமுக எம்.பி செந்தில்குமார் சமூக வலைதளங்களில் அதிரடியாக கருத்து தெரிவித்து அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வார். அந்த வகையில் நேற்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”நாங்க பணம் வாங்குனப்போ நீங்க விளக்கு பிடிச்சிங்களா” என எங்கள பார்த்து கேள்வி கேட்டார் அன்புமணி ராமதாஸ்.

இல்லை நாங்க எந்த விளக்கும் பிடிக்கவில்லை. பார்த்து யாரோ சொன்னாங்கனு நீங்களும் ஐயா ராமதாஸும் விளக்கு புடிச்சு அத ஃபோட்டோ போட்டு விட போறிங்க. பின்விளைவுக்கு நாங்கள் பொறுப்பல்ல” எனத் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து ஏசியாநெட் இணையதளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம். அதனை வாசித்த பாமக ஆதரவாளர்கள் செய்தி வெளியான ஒரு மணி நேரத்தில் தி.மு.க எம்.பிக்கு தொடர்ச்சியாக பல்வேறு நம்பர்களில் இருந்து போன் செய்துள்ளனர்.

இதுகுறித்து செந்தில் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ”நேற்று மாலை 5 மணி முதல் இன்று வரை தொடர்ச்சியாக விடாமல் phone செய்து கொண்டே இருக்கிறார்கள். போலீஸிடம் புகாரும் தெரிவிக்கப்பட்டு உள்ளது” என எச்சரித்து போன் செய்தவர்களின் எண்களையும் பட்டியலிட்டு பதிவு செய்துள்ளார்.

இதற்கு கருத்து தெரிவித்த பாமக ஆதரவாளர் ஒருவர், ”மூலபத்திரம் காட்ட துப்பு இல்லை இதுவேற” என பதிவிட்டு இருந்தார். அதற்கு பதிலடி கொடுத்துள்ள செந்தில் குமார், ” Mr. @guruselva8263 உங்க Twitter handle ID யில் இது போல் தான் retweet மற்றும் ஃபோட்டோ பதிவுகள்., நீங்க நல்லா காற்றிங்க.., சீக்கரம் delete பண்ணுங்க” என பதிவிட்டு சில ஆபாச புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here