முஸ்லீம்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதல் ஆளாக போராட்டம் – ரஜினிகாந்த் தமாஷ்

1
118

குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ஒரே ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டால் மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்று போராடும் மாணவர்களை மறைமுகமாக மிரட்டினார் ரஜினி. தான் முறையாக வருமான வரி செலுத்தி வருவதாகவும் ரஜினி தெரிவித்தார்.

தனது நண்பரகளுக்கு கந்து வட்டிக்கு கடன் கொடுத்தது பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் சட்டவிரோதமாக எந்த தொழிலும் செய்யவில்லை என்றும், யாரிடமும் கந்து வட்டி வாங்கவில்லை என்றும் மழுப்பினர் ரஜினிகாந்த.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

தேசிய குடியுரிமை சட்டத்தின் படி இந்திய முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டால் அவர்களுக்காக தான் முதல் ஆளாகபோராடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். போராடும் மக்கள் சமூக விரோதிகள் என்று ரஜினி முன்னதாக சொல்லியிருந்தார். சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, குடியுரிமை சட்ட திருத்தத்தால் இந்திய முஸ்லீம்களுக்கு பாதிப்பு என அரசியல் கட்சியினர் சிலர் பீதியை கிளப்பப்புவதாக தெரிவித்தார்.

தேசிய குடிமக்கள் பதிவேடு நாடு முழுமைக்கும் அமல்படுத்தப்படுவது தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்காத போது, அதை பற்றி ஏன் பிரச்சனை செய்ய வேண்டும் என்றும் ரஜினி வினவினார். இந்த விவகாரங்களில் மாணவர்களை அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற அவர், எனவே போராடும் முன்பு மாணவர்கள் தீர்க்கமாக சிந்திக்க அறிவுறுத்தினார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்கும் ஆணையத்திடம் இருந்து சம்மன் வரவில்லை என்றும் ரஜினி தெரிவித்தார். மேலும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் ரஜினி கேட்டுக் கொண்டார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here