முதல்வர் போட்டியில் இருந்து விலகிய ரஜினி… சீமானுக்கு கிடைத்த பெரிய வெற்றி…

0
385

சென்னை : இன்று லீலா பேலஸ் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் “நான் அரசியலுக்கு வருவது உறுதி, அதேவேளை நான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட போவதில்லை” என்று திடீர் பல்டி அடித்துள்ளார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

2017ம் ஆண்டு ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்தார். அதுமுதல் எந்த சமரசமும் இன்றி ரஜினியை கடுமையாக எதிர்க்கும் ஒரே நபர் சீமான் மட்டும் தான். எதிர்க்கும் ஒரே அரசியல் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும் தான்.

தமிழகத்தை ஒரு தூய தமிழர் மட்டுமே ஆள வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் கொள்கை. அந்த கொள்கையின் அடிப்படையில் மராட்டியரான ரஜினிகாந்த் தமிழகத்தை ஆள வேண்டும் என்று நினைக்க கூடாது. அவர் மகராஷ்டிரா போய் கட்சி தொடங்கட்டும் என்று தொடக்கம் முதலே எதிர்த்து வருகிறார் சீமான்.

மற்ற கட்சிகள் எல்லாம் ரஜினி யை எதிர்த்து பேசுவதற்கு பயந்து நடுங்கி கொண்டிருந்த போது சீமான் மட்டுமே துணிந்து எதிர்த்தார்.

தற்போது, ரஜினி கட்சிக்கு மட்டுமே தலைமை ஏற்பேன், முதலமைச்சர் வேட்பாளராக நான் இருக்க மாட்டேன். அதற்கு படித்தவர்களை முன்னிறுத்துவேன் என்று அறிவித்திருப்பது சீமானுக்கு கிடைத்த வெற்றியாகவே அரசியல் விமர்சகர்கள் பார்க்கிறார்கள்.

ரஜினியின் இந்த முடிவுக்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here