முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி பணக்கார பட்டியலில் முன்னேறிய பெண்மணி

0
42

ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 18 ஆம் இடத்தில் இருந்தார். சமீபத்தில் கொரோனா பாதிப்பால் பல வியாபாரங்கள் தொழில்கள் முடங்கியுள்ளன. இதனால் அம்பானிக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தனது சொத்து மதிப்பில் இருந்து சுமார் 47 சதவீதத்தை முகேஷ் அம்பானி இழந்துள்ளார். இதனால் உலகில் இரண்டாவது மிகப்பெரிய பெண் பணக்காரர் என அழைக்கப்படும் மெக்கென்சி பிசோஸ் அம்பானியை பின்னுக்கு தள்ளியுள்ளார். இதனால் அம்பானி பணக்காரர் பட்டியலில் 19வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

மெக்கின்ஸி பெஸோஸ் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெஸோஸ்-ன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தனது கணவரிடம் 2019ல் விவாகரத்து பெற்ற பிறகு மிகப்பெரிய தொகையை தனது கணவரிடமிருந்து செட்டில்மெண்ட் ஆக பெற்றுள்ளார். அதோடு அவருக்கு அமேசான் நிறுவனத்தில் நான்கு சதவீதம் பங்கு உள்ளது. இந்த கடின காலத்திலும் அமேசான் நிறுவனம் நிலையாக லாபம் சம்பாதித்து வருவதால் அவருடைய சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here