மீண்டும் தோற்றது இந்திய அணி… தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

23
274

நியூசிலாந்து : இந்திய -நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று நியூசிலாந்து அணி எளிதில் வெற்றி பெற்றது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

கிறிஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி 242 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் ப்ரித்வி ஷா, புஜாரா, விஹாரி ஆகியோர் அரைசதம் அடித்தனர். அதன்பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் 235 ரன்னில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் ஷமி 4 விக்கெட்டுகளும், பும்ரா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

அதன் பின்னர் தொடங்கிய இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி சொதப்பியது. தொடக்கம் முதலே இந்திய அணி தனது விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. சிறிது நேரம் தாக்குப்பிடித்த புஜாரா அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணியில் அட்டாக்கிங் பந்துவீச்சால் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 124 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி வெற்றிபெற 132 ரன்கள் என்ற எளிய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

தொடக்க ஆட்டக்காரர்களாக லாதம் மற்றும் ப்ளண்டெல் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் நிதானமாக ஆடிய இந்த அணி ஒரு கட்டத்தில் அதிரடிக்கு மாறியது. இதனால் நியூசிலாந்து அணிக்கு ரன் சேர்ப்பது எளிதானது. மறுபக்கம் இந்திய அணியினர் நியூசிலாந்து அணியின் விக்கெட்டை வீழ்த்துவதிலோ, அவர்கள் ரன் சேர்ப்பதைத் தடுப்பதிலோ தவறிவிட்டது. இறுதியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை 2-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தது.

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் ஒயிட்-வாஷ் செய்தது. அதன்பின்னர் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணிக்குப் பதிலடி கொடுத்தது. இறுதியாக தொடங்கிய டெஸ்ட் தொடரை வெல்லப்போகும் அணி எது என்பது குறித்த எதிர்பார்ப்பு உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு இருந்தது.

டெஸ்ட் தொடரை எந்த அணி கைப்பற்றினாலும், வெற்றிக்காக கடுமையாகப் போராட வேண்டியிருக்கும் என பலர் கணித்திருந்தனர். ஆனால், நியூசிலாந்து அணி இந்திய அணியை 2-0 என்ற கணக்கில் எளிதில் வீழ்த்தியது. இதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கிய பின்னர் இந்திய அணி தனது முதல் தொடரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், 9 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 7 வெற்றிகளுடனும் 360 புள்ளிகளுடனும் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா அணி உள்ளது. இந்தத் தொடர் வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here