மிக அவரச தேவைகளுக்கான வெளியூர் பயணத்திற்கு அனுமதி …? காவல்துறை புதிய அறிவிப்பு

53
365

சென்னை : கொரோனா ஊரடங்கால் மிக அவசர தேவைகளுக்காக பயணம் தேவைப்படுபவர்களுக்காக சென்னை போலீசார் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், பேருந்து, ரயில் என்று அனைத்து விதமான போக்குவரத்துகளும் முடங்கியுள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர பிற வேலைகளுக்காக மக்கள் வெளியே வரக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும், திருமணம், மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட மிக மிக அவசர தேவைகளுக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல இருந்தவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் சென்னையில் இருந்து அவசர தேவைகளுக்காக பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.

திருமணம், மருத்துவம், இறப்பு உள்ளிட்டவற்றுக்காக செல்ல அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு விண்ணப்பிக்கலாம். அவசர பயணத்துக்கான அனுமதி சீட்டு பெற கோரிக்கை கடிதத்துடன் அடையாள ஆவணங்களை தர வேண்டும்.

7530001100 இல் தொடர்பு கொண்டோ/ SMS /வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவிக்கலாம். gcpcorona2020@gmail.com என்ற முகவரிக்கும் இமெயில் அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளது. இதற்காக தனியாக கட்டுப்பாட்டு அறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

53 COMMENTS

  1. Thanks for some other informative blog. Where else may just I am getting that kind of info written in such a perfect way? I’ve a challenge that I am just now running on, and I have been on the glance out for such information.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here