மாத்திரைகளின் பின் அட்டையில் சிவப்புகலர் கோடு எதற்காக இருக்கிறது

12
241

சென்னை : சாதாரண தலைவலி, காய்ச்சல் என எது வந்தாலும் மருத்துவமனைக்கு செல்லாமல் நேரே பக்கத்தில் இருக்கும் மெடிக்கல் ஸ்டோருக்கு போய்தான் பலரும் மாத்திரை வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.

சில நேரங்களில் நாம் நோய் தீர்க்க சாப்பிடும் மாத்திரைகளே நம் உயிருக்கு உலைவைக்கும் எமனாகிவிடும். ஆம்..சில நேரங்களில் டோஸ் கூடிய மாத்திரைகளே நம் உயிருக்கு உலைவைத்து விடுகிறது.

சில நேரங்களில் நாம் கடையில் வாங்கும் மாத்திரைகளின் பின் அட்டையில் சிவப்புகலர் கோடு ஒன்று இருக்கும். இந்த ரக மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் சாப்பிடவே கூடாது. அதற்கான எச்சரிக்கை தான் இந்த சிவப்பு வண்ண கோடுகள்.

அதை தொடர்ச்சியாக சாப்பிட்டால் உயிரையே இழக்கும் அபாயமும் ஏற்படுமாம். அதனால் இனி மெடிக்கல்லில் நீங்களே உங்கள் நோயை சொல்லி மாத்திரை வாங்கினால் பின் அட்டையை திருப்பிப் பாருங்கள். மறந்துவிடாதீர்கள்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

12 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here