மாணவர்களுக்கு நீட் என்னும் தண்டனையை கொடுக்க நீதிமன்றம் யார்? – சீமான் சீற்றம்

0
144

தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தில் நீட் தொடர்பான நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்

மருத்துவ படிப்புகளுக்கு மேற்கொள்ளப்படும் நீட் தேர்வினால் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ துறை தமிழகத்தில் கனவாகி போனதாக அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வருடம் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 17 சதவீதம் குறைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பல்வேறு மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும், போராட்டங்ள் நடை பெற்றும் வருகிறது. இந்த நிலையில் இன்று சிவகங்கை மாவட்டம் உசிலம்பட்டியில் நடந்த நெல் அறுவடை திருவிழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

மிகவும் எளிய வழியில் உடல் எடையை குறைக்க imFresh கிரீன் காபி குடியுங்கள்

அப்போது அவரிடம் நீட் தேர்வை நீதிமன்றம் ரத்து செய்ய மறுப்பதை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு அவர் ‘ நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என சொல்லவதற்கும் மாணவர்களுக்கு நீட் என்னும் தண்டனையை கொடுப்பதற்கு நீதிமன்றம் யார் என கேட்கிறேன். குற்றம் செய்கிறவர்கள், கொள்ளை அடிப்பவர்கள், கொலை செய்பவர்கள், ஊழல் செய்ப்வர்களை விசாரித்து தண்டனை கொடுப்பதுதான் நீதிமன்றத்தினுடைய வேலை.

நெடுஞ்சாலைகளின் பெயர்களை மாற்றி சாராய கடைகளை திறந்து கொள்ளுங்கள் என்று சொல்கிற நீதிமன்றம். மாணவர்கள் படிப்பு விஷயங்களில் தலையிடுவது என்ன நியாயம். நீங்கள் எல்லாரும் நீட் தேர்வு எழுதித்தான் வந்தீர்களா? இது எப்பேர்ப்பட்ட சர்வாதிகாரம். நீட் தேர்வை ரத்து செய்யமுடியாது என நீதிமன்றம் முடிவு செய்வதால் இது பாராளுமன்ற, சட்ட மன்ற ஜனநாயகமா அல்லது நீதிமன்ற ஆட்சியா? என்று கேள்வி எழுப்பினார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here