மாட்டுச்சாணம் ரூ500, மாட்டு மூத்திரம் (கோமியம்) ரூ.1000: கொரோனாவால் சூடுபிடிக்கும் புது பிசினஸ்

38
916

கொல்கத்தா : மாட்டுச்சாணம் ரூ500, கோமியம் ரூ.1000 கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் வியாபாரம் வீழ்ச்சி அடைந்து பொருளாதாரம் சரிந்து உள்ள நிலையில் கொரோனா வைரஸை பயன்படுத்தி ஒரு சிலர் வியாபார தந்திரங்கள் செய்து வருகின்றனர்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

இந்த நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த ஒருவர் இரண்டு மாடுகள் வைத்திருப்பதாகவும் அந்த மாட்டின் கோமியம் மற்றும் மாட்டுச் சாணத்தையும் கொரோனா வைரஸ் பரபரப்பை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஒருசில அமைப்பினர் சிலர் கொரோனாவுக்கு மருந்தாக கோமியத்தை கொடுத்தால் சரியாகிவிடும் என்றும் மாட்டுச்சாணத்தை உடலில் பூசிக்கொண்டால் கொரோனா அண்டாது என்று கூறியதை அடுத்து தனக்கு இந்த யோசனை வந்ததாகவும் இதனையடுத்து தனது இரண்டு மாடுகளின் கோமியத்தை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 500க்கும் மாட்டுச்சாணத்தை கிலோ ஒன்றுக்கு ரூபாய் ஆயிரத்துக்கும் விற்பனை செய்து வருவதாக அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க பலர் தன்னிடம் கோமியம், மாட்டுச்சாணத்தை வாங்கிச் செல்வதாகவும் மாட்டின் பாலில் இருந்து கிடைக்கும் வருமானத்தை விட இதில் பல மடங்கு வருமானம் தனக்கு கிடைத்ததாகவும் அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்

மாட்டு சாணம் மற்றும் கோமியம் கொரோனா வைரஸை குணமாக்கும் என்று எந்த ஆய்வறிக்கையும் கூறாத நிலையில் தற்போது மக்கள் இவ்வாறு வாங்கிச் சென்று கொண்டிருப்பது அவர்களுடைய அறியாமையை வெளிப்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

38 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here