போராட்டம் எதிரொலி – 5,8ம் வகுப்பு பொது தேர்வு ரத்து.. பெற்றோர், குழந்தைகள் நிம்மதி

0
333

பணிந்தது தமிழக அரச. 5 மற்றும் 8ம் வகுப்பு பொது தேர்வு ரத்து அரசாணை வெளியிட்ட்து பள்ளி கல்வி துறை.

தமிழகத்தில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், கல்வியாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து தனது எதிர்ப்பை தெரிவித்து வந்தார். முதலில் கல்வி அமைச்சர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெறட்டும் பிரகள பொது தேர்வது அறிவிப்பை வெளியிடட்டும் என்றும் சாடினார். “இது ஒரு ஆகப்பெரும் வன்முறை.. இடைநிற்றலின் மூலம் மாணவர்களை வடிகட்டி வெளியேற்றும் மற்றுமொரு குலக்கல்வித்திட்டம்”. பொதுத்தேர்வினால் 10 வயசு குழந்தை மற்றவர்கள் முன்பு அவமானப்படும் நிலையை உருவாக்குவது மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்று குற்றம்சாட்டினார்.

5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதை கண்டித்து நேற்றைய தினம் நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை பெரும் போராட்த்தை நடத்தியது.

திமுக தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன், மநீம தலைவர் கமல்ஹாசன், உட்பட பொதுமக்கள் தரப்பினர் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த அறிவிப்பு மட்டும் நடைமுறைக்கு வந்தால், கல்வி இடைநிற்றல் அதிகரிக்கும்.. குழந்தை திருமணங்கள் அதிகரிக்கும். குழந்தை தொழிலாளர்கள் அதிகமாக உருவாக தொடங்குவர்.. எந்த வளர்ந்த ஒரு நாட்டிலும்கூட இப்படி ஒரு திட்டம் அறிவிக்காதபோது, நம் நாட்டில் அதுவும் தமிழகத்தில் அறிவித்ததுதான் பெரிய அதிர்ச்சியாக இருந்தது… அறிவியலுக்கும் உளவியலுக்கும் இது எதிரானதாக பார்க்கப்பட்டது.

மிகவும் எளிய வழியில் உடல் எடையை குறைக்க imFresh கிரீன் காபி குடியுங்கள்

கல்வி மறுக்கப்பட்ட தலித் மக்கள், பழங்குடியினர், அன்றாடங் காய்ச்சிகள் தான் இதனால் நேரடியாக பாதிக்கப்படுவார்களே என்ற ஆதங்கமும், தவிப்பும் மக்கள் தரப்பில் வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்தது.

இனி எந்த அரசும் மாணவர்களின் கல்வி விஷயத்தில் விளையாட கூடாது என்பதற்கான அறிவிப்புதான் 5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்று புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here