பெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் தெரியுமா.?!

8
158
silhouette of father playing with his daughter

அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன். ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள் அப்பாக்கள்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

நேர்மையான நண்பன் தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தை தான் என பெண்கள் எண்ணுகிறார்கள். பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான். தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர் தந்தை தான் என்கின்றனர் பெண்கள். உலகை அறிமுகம் செய்தவர் பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தை தான். இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு இது.

மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை. வீட்டில் சகோதரன் வாங்கிய அளவு அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை.

மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், “முடியாது..” என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை. தன்னால் முடிந்த வரை மகள்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள் அப்பாக்கள்.

வெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆனால், அது எந்நேரமாக இருந்தாலும், கால்கடுக்க காத்திருந்து அழைத்துவரும் காவலன் அப்பா. ஒவ்வொரு மகள்களின் முதல் காதலன் அப்பா தான். தங்களுக்கு என்ன மோசமான சூழ்நிலை வந்தாலும், ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு வரும் சூப்பர் ஹீரோ அப்பா தான்.

தைரியம் ஊட்டும் அம்மா என்னதான் அம்மா பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள் தான். அம்மாவுக்கு எப்போதுமே தங்களது குழந்தைகள் மீது ஓர் பயம் இருக்கும் அது பயம் அல்ல,அக்கறை. ஆதலால், தைரியத்தை ஊட்ட அப்பாக்களால் மட்டும் தான் முடியும்.

பெண்களின் கண்ணீருக்கு உரியவர் கடைசி வரை தன்னுடன் இருக்க ஒவ்வொரு மகளும் விரும்பும் உறவு அப்பா. அப்பாவின் மறைவு பெண்களின் கண்ணீர் ஊற்றுக்கு காரணமாகிறது. ஓர் மகளின் வாழ்க்கையில் அப்பா என்பவர் ஓர் உறவு அல்ல, தோழன், வழிகாட்டி, ஆசான், ஹீரோ, காவலன், என எண்ணற்ற பாத்திரங்களை தாங்கிக் கொண்டிருப்பவர் தான் அப்பா.

ஆதலால்தான் பெண்கள் தங்களது தந்தையை அதிகமாக நேசிக்கிறார்கள்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

8 COMMENTS

  1. excellent issues altogether, you just gained a new reader.

    What would you recommend about your put up that you just made some days ago?

    Any certain?

  2. Simply desire to say your article is as surprising.

    The clearness in your post is just nice and that i could suppose you’re an expert on this
    subject. Fine together with your permission let me to grab
    your feed to stay updated with imminent post. Thanks one million and please keep up the enjoyable
    work.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here