பிரபாகரன் பிறந்த நாள் விழா: குருதி கொடை வழங்கி சிறப்பித்த குமரி நாம் தமிழர்

3
94

குமரி : தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் விழா மற்றும் மாவீரர் நாளை முன்னிட்டு குமரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் குருதி கொடை, கண் தானம் மற்றும் உறுப்பு தானம் முகாம் நடைபெற்றது

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உலக தமிழர்களால் தேசிய தலைவர் என போற்றப்படுபவர். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழாவையும், நவம்பர் 27 மாவீரர் நாளாகவும் உலகத் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியினர் பிரபாகரன் மற்றும் விடுதலை புலிகளின் உயிரிய தியாகத்தை குறிக்கும் விதமாக, தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக முகாம் அமைத்து குருதி தானம், உடல் உறுப்பு தானம் மற்றும் கண் தானம் வழங்கும் நிகழ்வு நடத்தினர். இந்நிகழ்வுகளை பொது மக்கள் பெரிதும் வரவேற்றனர்.

இந்நிகழ்வில் பத்மநாபபுரம் தொகுதி செயலாளர் மற்றும் வேட்பாளர் சீலன் தலைமை வகித்தார். கிழக்குமாவட்ட செயலாளர் பெல்வின் ஜோ, தலைவர் ஜெயன்றீன் மத்திய மாவட்ட செயலாளர் ரீகன் ரொனால்டு மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் சதீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், நாகர்கோயில் தொகுதி வேட்பாளர் விஜயராகவன், விளவங்கோடு வேட்பாளர் ஆட்லின் மற்றும் அனைத்து தொகுதி நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் 26 பேர் தங்கள் உடல் உறுப்பு தானமும், 28 பேர் கண்தானமும் 40 பேர் குருதி தானமும் செய்தனர். கலந்துகொண்ட அனைவருக்கும் தொகுதி தலைவர் ரெஜினால்டு தினேஷ் குமார் நன்றியுரை ஆற்றினார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

3 COMMENTS

  1. Hi there! This post couldn’t be written any better! Reading through this post reminds me of my previous room mate! He always kept talking about this. I will forward this article to him. Pretty sure he will have a good read. Thank you for sharing!

  2. I like what you guys are up too. Such clever work and reporting! Keep up the superb works guys I’ve incorporated you guys to my blogroll. I think it will improve the value of my web site 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here