பினராயி விஜயன் அவர்களே…… உண்மையில் நீங்கள் யார்?

0
83

மனதை தொட்ட ஓர் பதிவு :

“கேரளா முதலமைச்சர் #பினராயி_விஜயன் அவர்களே… உண்மையாக நீங்கள் யார்.?

ஒவ்வொரு நாளிலும் பத்திரிகை பேட்டியில் பேசுவது கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒரு நாள் சொன்னீர்கள், கவலை வேண்டாம்.
கவனம் போதும் என்று.

மறுநாள் சொன்னீர்கள் வீட்டில் ஒதுங்கி இருந்து கொள்ளுங்கள் என்று.

அடுத்த நாள் உணவு பொருட்கள் ரேஷன் கடை வழியா இலவசமாக கிடைக்கும் என்று.

ரேஷன் அட்டை இல்லாதோர் ஆதார் அட்டை காண்பித்து வாங்கி கொள்ளுங்கள் என்று.

அடுத்த நாள் ரூ 1000 ரேசன் கார்டு ஒன்றுக்கு என்று.

போதாமல் எல்லா வித உதவி தொகைகளும் வரும் 2 மாத காலத்திற்கு முன்பாக அளிக்கப்படும் என்று.

மறுநாளே உதவித் தொகை மக்கள் கைகளில்.

நிவாரணப் பொருட்களை காவல் துறையினரும், கலெக்டரும், எம்எல்ஏக்களும் சுமந்து சென்று வீடுகளில் சேர்ப்பது என்ன.?

மறுநாள் அனைவருக்கும் உணவு இருக்கா கிடைத்ததா என்று விசாரித்தது என்ன.?

பிறகு உங்களுக்கே மேலும் ஒரு சந்தேகம் வந்தது.?

உணவுக்காக ஹோட்டலை நம்புவோர் பட்டினியாகி விட்டால் என்ன ஆவார்கள்.? என்று சமூக சமையலறையை திறந்து வைத்தீர்கள்.

உணவு தேவைப் படுவோர் அச்சத்தால் வெக்கப்பட்டு சொல்ல மாட்டார்கள் என்று பொது தொலைபேசி எண்களை வெளியிட்டீர்கள்.

அதன் பிறகும் சும்மாவா இருந்தீர்கள் சார் நீங்கள்.?
இல்லவே இல்லை.

தெருவில் வாழும் ஏழைகள், முதியோர்கள், மன நோயாளிகள் இவர்களைத் தேடி உணவுத் தடையில்லாமல் செல்வதற்கு ஒரு படையே அமைத்தீர்கள்.

சமீபத்தில் தெருவில் அலையும் நாய்களும், குரங்குகளும் மற்ற மிருகங்கள் எதுவும் பட்டினி கிடக்கக் கூடாது என்று உணவு அளிக்க கூறியுள்ளீர்கள்..

‘ஓர் உயிருக்கு பசி என்றால் எப்படி இருக்கும்..’ என்பதை உணர்ந்தவரின் ஆட்சி என்றால் இப்படித்தான் இருக்குமோ என்னவோ?

வாழ்த்துக்கள் CM..!

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here