பாடகர் எஸ்பிபி உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி

16
173

சென்னை : உடல்நலக்குறைவால் காலமான பாடகர் எஸ்.பி.பி.யின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம், தொற்றில் இருந்து மீண்டாலும், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமான நிலையில், நேற்று பிற்பகல் 1.04 மணிக்கு உயிர் பிரிந்தது.

இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாகத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எஸ்.பி.பி.யின் உடல் எடுத்து வரப்பட்டது. அங்கு பொதுமக்கள், பிரபலங்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.

பின்னர் நேற்று நள்ளிரவே தாமரைப்பாக்கத்தில் உள்ள விவசாயப் பண்ணைக்கு அவரது உடல் அடக்கம் செய்வதற்காக எடுத்து வரப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் விஜய், எஸ்.பி.பி.யின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

 

16 COMMENTS

  1. It is the best time to make a few plans for the future and it’s time
    to be happy. I have learn this put up and if I could I want
    to suggest you some interesting issues or advice. Maybe you can write next articles referring to this article.

    I want to read more things about it!

    Look at my web blog :: we just did 46 shirt

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here