பரவிய வதந்தி.. பதில் சொன்ன நயன்தாரா…

3
222

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனுகும் நானும் ரவுடிதான் படத்தில் மலர்ந்த காதல் இன்று வரை தொடர்கிறது. இவர்கள் இருவரும் எப்போது திருமணத்தை அறிவிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில் இருவருக்குமான காதல் முறிந்ததாக செய்தி பரவியது.

ஜீ தமிழ் சினிமா விருது விழாவில் நயன்தாரா தனியாக வந்து கலந்து கொண்டார். இதைக் காரணமாக வைத்து இருவரும் பிரிந்து விட்டார்கள் என்றெல்லாம் தகவல்கள் காட்டுத் தீயாக பரவின. ஆனால் எங்களுக்குள் எந்த பிரிவும் ஏற்படவில்லை என்று இருவரும் ஒரே குரலில் தெரிவித்தனர்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட செல்பியை பகிர்ந்திருக்கும் விக்னேஷ் சிவன், என்றும் என்றென்றும் நயன்தாரா தான் என்று கூறியுள்ளார். மேலும் விருது விழாவின் போது நயன்தாரா அணிந்திருந்த அதே உடையில் தன்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவின் மூலம் தங்களைப் பற்றி பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விக்னேஷ் சிவன்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Minnal News APP யை இப்போதே டவுன்லோட் செய்யுங்கள்

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here