பணிநிரந்தரம் வேண்டி டாஸ்மாக் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு

3
420

டாஸ்மாக் பணியாளர்கள் பணி நிரந்தரம் வேண்டி சென்னை மேலாண்மை இயக்குனர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக குமரி மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் அறிவித்துள்ளனர்

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் மாவட்ட பொதுக்குழு கலந்தாய்வுக் கூட்டம் அரசு ஊழியர்கள் சங்க கட்டடத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார் மாவட்டச் செயலாளர் மணிகண்டன் காசிநாடார் பிரசாத்குமார் முன்னிலை வகித்தார். மாநிலச் செயலாளர் ஆ.மோஸ்லின் பியர்சன், பிரச்சார செயலாளர் ஞானசுந்தர் கருத்துரை வழங்கினார்கள்.

18 ஆண்டுகால டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கி காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிக்கொடை குறைந்தபட்சம் 10 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும், குறைந்தபட்ச ஊதிய தொகை 21 ஆயிரம் ஓய்வூதியம் 10,000 வழங்கப்பட வேண்டும், அரசு காலிப்பணியிடங்களில் டாஸ்மாக் பணியாளர்களை கல்வித்தகுதி அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும், கொரானா தாக்கத்தால் உயிரிழந்த அனைத்து பணியாளர் குடும்பத்திற்கும் ரூபாய் 25 லட்சம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும், அவர்களின் குடும்ப வாரிசுக்கு அரசுத்துறையில் வாரிசு பணி வழங்கப்பட வேண்டும், விற்பனையாளர்களை மேற்பார்வையாளராகவும், உதவி விற்பனையாளர்கள் விற்பனையாளர்களும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும், டாஸ்மாக் விற்பனை தொகையினை சென்னையில் நேரடியாக வங்கிகள் வசூல் செய்வதைப் போன்று அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், டாஸ்மாக் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதினை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 59 ஆக உடனடியாக உயர்த்தப்பட வேண்டும், டாஸ்மாக் நிறுவனத்தில் நடைமுறையில் உள்ள தொழிற்சங்கங்களை அங்கீகாரம் அளிக்க ரகசிய தேர்தல் நடத்தி தொழிற்சங்கங்களை அங்கீகாரம் செய்யப்பட வேண்டும், டாஸ்மாக் பணியாளர்கள் டாஸ்மாக் துறையிலோ அல்லது அரசுதுறைகளில் பணியமர்த்தம் செய்யும்போது டாஸ்மாக் நிர்வாகத்தில் பணியாற்றிய காலத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும், உட்பட பல கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி 16.12.2020 அன்று சென்னை மேலாண்மை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற இருக்கிற உள்ளிருப்பு போராட்டத்தில் குமரி மாவட்டத்தின் சார்பில் அனைத்து பணியாளர்களும் கலந்து கொள்வதென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் ஏராளமான டாஸ்மாக் பணியாளர் கலந்து கொண்டனர் சுரேஷ்குமார் மாவட்ட பொருளாளர் நன்றி கூறினார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

3 COMMENTS

  1. You really make it appear really easy along with your presentation however I in finding this topic to be actually something that I think I would never understand. It seems too complex and very wide for me. I’m looking forward to your subsequent put up, I will try to get the grasp of it!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here