நுங்கு வியாபாரத்தில் இறங்கிய MBBS படிக்கும் மாணவர் பெற்றோர் நெகிழ்ச்சி ..!

0
16

சென்னை : நாடுமுழுவதும் நிலவிவரும் ஊரடங்கால் பல கோடிக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினக்கூலி தொழிலாளர்கள் வெளிமாநில தொழிலாளர்கள் கட்டுமான தொழிலாளர்கள் என இப்படி பலவகையான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் திரையுலக பிரபலங்கள் பல தெருக்களில் கடைகள் போட்டு வியாபாரம் செய்யும் நிலை ஏற்பட்டது.

தற்போது மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் சிவா, 21 என்னும் சாதாரண மாணவர் தனது தந்தை மற்றும் தாய்க்கு உதவி செய்வதற்காக நுங்கு வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளார். கோடைகாலம் என்பதால் கடந்த இரண்டு மாத காலமாக இந்த வேலையில் ஈடுபட்டுள்ளதாக சிவா தெரிவித்துள்ளார்.

சிவா நன்கு படிக்கும் மாணவர் என்பதால் +1, +2 தனியார் பள்ளியில் அவருக்கு கட்டணம் இன்றி சேர்த்துக் கொண்டனர்.

+2வில் 1179 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதலிடம் பெற்றார். கவுன்சிலிங்கில் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்தது. நல்ல மதிப்பெண் பெற்றதால் வேலுார் அரசு மருத்துவக்கல்லுாரியில் மருத்துவ படிப்பிற்காக MBBS சேர்ந்தார்.

அப்படித்தான், பத்தாண்டுகளாக சிவா, நுங்கு விற்பனை செய்கிறார். மருத்துவப் படிப்பில் சேர்ந்தாலும், நுங்கு விற்பனையை கைவிடவில்லை. ‘பனை மரங்களை குத்தகைக்கு பிடித்து, ஆள் வைத்து நுங்கு இறக்கி, விற்பனை செய்கிறோம். ஆடுகள், கன்றுக்குட்டியும் வீட்டில் வளர்க்கிறோம்.

ஏதாவது ஒரு வகையில் பெற்றோர் பார்க்கும் வேலையின் சுமையை குறைக்க வேண்டும் என்பதற்காக, ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் சிரமம் பாராமல், நுங்கு விற்பனை செய்கிறேன் என சிவா கூறியது நம்மை நெகிழவைக்கிறது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here