நீட் கொடூரம்.. நெல்லையில் புதுமணப் பெண்ணின் தாலியைக் கழற்ற வைத்து கொடுமை…

0
27

நெல்லை : நீட் தேர்வு எழுத சென்ற புதுமணப்பெண் ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த தாலியை கழட்டியதோடு காலில் அணிந்திருந்த மெட்டியையும் கழற்றியது பொது மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சேர்ந்த வாசுதேவன் என்பவரின் மனைவி முத்துலட்சுமி. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தேர்வு மையத்திற்கு நீட் தேர்வு எழுத வந்தார். முத்துலட்சுமி கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்துள்ளார். இவருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இன்று நீட் தேர்வு எழுத வந்த அவர் தனது கழுத்தில் இருந்த தாலி மற்றும் காலில் அணிந்திருந்த மெட்டியை கழற்றி கணவரிடம் கொடுத்து விட்டு தேர்வு எழுத சென்றார்.

பொதுவாக பெண்கள் தங்களின் கழுத்தில் இருக்கும் தாலியை கழற்ற யோசிப்பார்கள். அதை அமங்கலமாக கருதுவார்கள். ஆனால் அப்படிப்பட்ட பெண்களையும் கூட அதைச் செய்ய வைத்து விட்டது இந்த நீட் கொடுங்கோல் தேர்வு. ஒரு தாலியில் என்ன முறைகேடு செய்து விட முடியும் என்று புரியவில்லை. இப்படி கிடுக்கிப்பிடி விதிகளை வைத்து தேர்வு நடத்தியும் கூட தமிழகத்தில் போலியான மாணவர்களை மருத்துவக் கல்லூரியில் சேர்த்த அக்கிரமங்களும் நடந்துள்ளதை மக்கள் மறக்கவில்லை. இத்தனை பாவங்களைச் சம்பாதித்து ஒரு தேர்வு தேவையா என்பதே மக்களின் கோபாவேச கேள்வியாக உள்ளது.

தாலி குறித்து ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதம் நடத்திய போது டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசி நிகழ்சியை ரத்து செய்ய வைத்த சங்பரிவார் அமைப்புகள் தற்போது கள்ள மவுனம் காப்பதாக பலரும் குற்றம்சாட்டியுள்னர்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here