நான் இறந்துவிட்டேன்: நித்யானந்தா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

0
137

நான் இறந்துவிட்டேன்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் நித்யானந்தா வெளியிட்ட வீடியோவால் பெரும் பரபரப்பு.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் சாமியார் நித்யானந்தா. உலகின் ஏதோ ஒரு இடத்தில் தலைமறைவாக இருந்து கொண்டு… நித்தம் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக இருக்கிறார் நித்யானந்தா. தினம் தினம் ஒரு வீடியோ என்ற வகையில் புது புது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போதும் ஒருவீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் அவர்  வெளியிட்ட புதிய வீடியோவில் கூறியிருப்பதாவது:

20 ஆண்டு கால போராட்டத்துக்கு பிறகு கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது .வாடிகனைப் போல இந்து மதத்துக்கு என ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறிவிட்டது.

ஆனால், அதுகுறித்து வேறு எந்த தகவல்களையும் தரப்போவது இல்லை. சில நாடுகளுடன் தூதரக ரீதியிலான உறவுகளும் தொடங்கிவிட்டது. என்னுடைய மரணத் துக்குப் பிறகு எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடையவேண்டும் என்பது குறித்து உயில் எழுதி வைத்துவிட்டேன்.

தமிழகத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் இனிமேல் தமிழகத்துக்கு வரப்போவது இல்லை. தமிழக ஊடகங்களை பொறுத்தவரை நான் இறந்துவிட்டேன். எனது உடல் பிடதியில் உள்ள ஆசிரமத்தில் தான். அடக்கம் செய்ய வேண்டும் இதுவே எனது கடைசி ஆசை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு வீடியோவில் அவர் கூறியுள்ளது பக்தர்களிடையே பெரும் அச்சத்தை  ஏற்படுத்தி உள்ளது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here