துபாயில் தீ விபத்தில் சிக்கிய மனைவியை காப்பாற்ற சென்ற கேரள நபர் பலி

1
228

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் தீ விபத்தில் சிக்கிய மனைவியை காப்பாற்ற சென்ற கேரள நபர் பலி.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் வசித்து வந்தவர் அனில் நினன் (வயது 32).  கேரளாவை சேர்ந்தவரான இவரது மனைவி நீனு.  இந்த தம்பதிக்கு 4 வயதில் மகன் இருக்கிறான்.

கடந்த வாரம்  திங்கட்கிழமை நினன் வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தம்பதி காயமடைந்தனர்.  அவர்களில் சிகிச்சை பலனின்றி நினன் உயிரிழந்து உள்ளார் என அந்நாட்டு ஊடகத்தில் இன்று தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றி அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் கூறும்பொழுது, எங்களுக்கு துயரம் நிறைந்த நேரம் இது.  நீனு மருத்துவமனையில் தேறி வருகிறார்.  அவர் பாதுகாப்புடன் உள்ளார்.  ஆனால் நினன் மரணம் எங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது என கூறினார்.  இந்த தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

இதேபோன்று சொஜன் தாமஸ் என்பவர் கூறும்பொழுது, கடந்த வாரம் திங்கட்கிழமை தனது வீட்டு வராண்டாவில் நின்று கொண்டிருந்த நீனுவை தீப்பற்றி கொண்டது.  அவரது அலறல் சத்தம் கேட்டு படுக்கை அறையில் இருந்து நினன் ஓடி சென்று தனது மனைவியை காப்பாற்ற முயன்றுள்ளார்.  இதில் தீ நினனை சூழ்ந்து கொண்டது என கூறினார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here