திவாலான எஸ் பேங் – ஒரு நாள் முன்பு 250 கோடி எடுத்த நிறுவனம் – ஏமாந்த பொதுமக்கள்

0
173

மும்பை: திவாலான யெஸ் வங்கியில் இருந்து வாடிக்கையாளா்கள் அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்று ஆர்பிஐ கட்டுப்பாடு விதிப்பதற்கு ஒரு நாள் முன்பு, ஒரு நிறுவனம் ரூ.265 கோடியை வங்கியில் இருந்து எடுத்துள்ளது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

வதோதரா நகராட்சியின் கீழ் செயல்படுத்தப்படும் சிறப்பு தேவைக்கான வாகனங்கள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வதோரா ஸ்மார்ட் சிட்டி டெவலப்மென்ட் கம்பெனி, யெஸ் வங்கியில் இருந்து ரூ.265 கோடியை எடுத்துள்ளது.

நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் தனியாா் வங்கியான யெஸ் வங்கியில் இருந்து வாடிக்கையாளா்கள் அதிகபட்சமாக ரூ.50,000 மட்டுமே எடுக்க முடியும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வியாழக்கிழமை அறிவித்தது.

அதற்கு ஒரு நாள் முன்பு, அந்த நிறுவனம் ரூ.265 கோடியை எடுத்துள்ளது.

யெஸ் வங்கி நிா்வாகத்தையும் தன்வசம் எடுத்துக் கொண்டுள்ள ஆா்பிஐ, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி பிரசாந்த் குமாரை யெஸ் வங்கி நிா்வாகியாக அறிவித்துள்ளது. யெஸ் வங்கி வாராக்கடன் சுமையால் பெரிய அளவிலான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

முன்னதாக, எஸ்பிஐ மற்றும் சில நிதி சாா்ந்த நிறுவனங்கள் இணைந்து யெஸ் வங்கியை கடனில் இருந்து மீட்க இருப்பதாகவும், இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் வியாழக்கிழமை முற்பகலில் தகவல் வெளியானது. இதையடுத்து, பங்குச் சந்தையில் யெஸ் வங்கி பங்குகளின் விலை அதிகரித்தது.

ஆனால், இப்போது அந்த தகவலுக்கு மாறாக, யெஸ் வங்கி நிா்வாகத்தை ஆா்பிஐ எடுத்துக் கொண்டதுடன், அந்த வங்கியில் இருந்து ரூ.50,000 வரை மட்டுமே எடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வங்கி வாடிக்கையாளா்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here