திருமணமான மறுநாளில் மணப்பெண் தற்கொலை: புதிதாக கட்டிய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

1
43

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் மகன் செல்வக்குமார் (27) மற்றும் விருதுநகர் பாண்டியன் நகரில் வசிக்கும் சீனிவாசன் மகள் சுவேதா (20) ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சியிக்கப்பட்டு கடந்த திங்கள் கிழமை மானாமதுரையில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் நடந்தது.

இந்நிலையில், திருமணமான மறுநாளான செவ்வாய் கிழமை மாலை மணமகன் வீட்டின் ஒரு அறையில் மணப்பெண் சுவேதா சேலையால் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இவரின் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மானாமதுரை நகர் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செல்வகுமார் கட்டிய வீட்டில் திருமணத்திற்கு முதல் நாள் கிரக பிரவேவசம் வைத்து மறுநாள் திருமணம் செய்து அடுத்த நாள் கட்டிய மனைவி தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here