தமிழகம் முழுவதும் நெடுஞசாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது!

3
279

பொங்கல் பண்டிகை முடிந்து மக்கள் சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு திரும்பி கொண்டிருப்பதால் தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக திருச்சி மதுரை போன்ற பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது வேலூர் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. திருச்சி தேசிய நெடுஞ்சாலை வாகன நெரிசலில் சிக்கி தவிக்கிறது. அதுபோல் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கிறது. மதுராந்தகம் நெடுஞ்சாலையில் வாகனங்கள் நகர முடியாமல் திணறிவருகிறது.

சென்னை புறநகர் பகுதிகளில் மாலையில் இருந்தே கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. நாளை காலை தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வாகனங்கள் சென்னை மாநகருக்குள் நுழையும் பொழுது இன்னும் கடுமையான வாகன நெரிசல் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.

தமிழக காவல்துறை உடனடியாக களமிறங்கி வாகன நெரிசல் ஏற்படும் பகுதிகளில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here