தமிழகத்தில் இன்று புதிதாக 3,949 பேருக்கு கொரோனா: சென்னையில் 2167 பேர் பாதிப்பு

0
18

சென்னை : தமிழகத்தில் இன்று (திங்கள்கிழமை) புதிதாக 3,949 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் பற்றிய இன்றைய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 3,949 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் உள்ளவர்களில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டோர் 3,841 பேர், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டவர்கள் 108 பேர்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 2,167 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய அறிவிப்பில் மேலும் 62 பேர் (அரசு மருத்துவமனை -44, தனியார் மருத்துவமனை -18) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேறு நோய் பாதிப்பு இல்லாமல் பலியானவர்கள் 11 பேர்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 1,141 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று 2,212 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 47,749 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் தனிமையில் உள்ளவர்கள் உள்பட மொத்தம் 37,331 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 30,039 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 11,40,441 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here