டாஸ்மாக் பணியாளர்கள் பெருந்திரள் முறையீடு கோரிக்கை மனு அளித்தனர்

13
369

குமரி : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து டாஸ்மாக் பணியாளர் சங்கம் மாநில செயலாளர் ஆ.மோஸ்லின் பியர்சன் கூறியதாவது:

டாஸ்மாக் நிறுவனத்தில் சுமார் 27 ஆயிரம் பணியாளர்கள் கடந்த 17 ஆண்டுகளாக குறைந்த தொகுப்பூதியத்தில் பணியாற்றிவரும் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். அரசின் நிதி நிலையை கருத்தில் கொண்டு கொரோனா நோய்தொற்று காலத்தில்கூட அரசின் ஆணையை ஏற்று பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு 30 சதவீதம் போனஸ் வழங்கப்பட வேண்டும்.

கோரிக்கை மனு

 

டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் நோய் தொற்று அதிகம் பரவ காரணமாய் இருப்பதால் கடையின் பணி நேரத்தை காலை 10 மணியிலிருந்து இரவு எட்டு மணிவரை செயல்படுவதாக அனுமதித்து வழக்கத்தில் இருந்து வந்தது இதனால் டாஸ்மாக் பணியாளர்கள் இரவு நேரங்களில் சமூக விரோதிகளால் தாக்கப்படும் சம்பவங்கள் குறைந்துள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்துக்கு காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்கும் குறிப்பாக பொதுமக்களுக்கும் சமூகக் குற்றச் செயல்களிலிருந்து பாதுகாப்பதற்கு தகுந்த நேரம் ஆக உள்ளதால் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றாமல் காலை 10 மணியிலிருந்து இரவு 8 மணி வரை செயல்படுவதற்கு உரிய உத்தரவுகள் வழங்கி அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.

என்பது போன்ற கோரிக்கைகள் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மூலம் உயர்திரு மாவட்ட ஆட்சியாளர் மூலமாக திருமிகு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோருக்கு பெருந்திரள் முறையீடு கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

போராட்டத்திற்கு மாநில செயலாளர் ஆ.மோஸ்லின் பியர்சன் தலைமை தாங்கினார் பாஸ்கர் மாவட்டத்தலைவர் மணிகண்டன் மாவட்ட செயலாளர் உட்பட டாஸ்மாக் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

13 COMMENTS

  1. No matter if some one searches for his necessary thing, so he/she wishes to be available that in detail, so that thing is maintained over here. Emelina Binky Dael

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here