ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் பிரதமராவாரா? – தமிழர்களின் ஆதரவு யாருக்கு?

220
1151
கனடாவின் 43ஆவது மக்களவை பொதுத் தேர்தல் வரும் அக்டோபர் 21ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெற உள்ளது. கனடாவின் தற்போதைய பிரதமரான லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ இரண்டாவது முறையாக இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய முக்கிய கட்சிகளின் தலைவர்கள், அனல் பரந்த விவாதங்கள், அதிர்வலைகளை எழுப்பிய குற்றச்சாட்டுகள், பகிரங்க மன்னிப்புகள், எதிர்பார்க்காத திருப்பங்கள் என வழக்கம்போல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது தேர்தல் களம். இந்நிலையில், கனடா தேர்தல் களத்தின் தற்போதைய நிலவரம் என்ன? தேர்தலில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கப்போகும் விடயங்கள் என்னென்ன? கருத்துக்கணிப்புகள் சொல்வது என்ன? கூட்டணி ஆட்சி அமையுமா? தமிழர்களின் ஆதரவு யாருக்கு கிடைக்கும்? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த கட்டுரை. கனடாவின் தலைவர் இங்கிலாந்து ராணி நிலப்பரப்பில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடாக விளங்கும் கனடாவில் பத்து மாகாணங்களும், மூன்று ஆட்சி நிலப்பகுதிகளும் உள்ளன. ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகியவை அதிகாரப்பூர்வ மொழிகளாக உள்ளன. அரசியல்சட்ட முடியாட்சி (Constitutional Monarchy) முறையை அடிப்படையாக கொண்ட இந்த நாட்டின் தலைவராக 1952ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இருந்து வருகிறார். தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை கொண்ட மக்களவை மற்றும் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்களை கொண்ட செனட் சபை முதலிய இரட்டை அமைப்பை இந்த நாடு கொண்டுள்ளது. தமிழர்களின் ஆதரவு யாருக்கு? 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கனடாவின் மொழி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பின்டி, அங்கு 1,57,000 தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் இலங்கையில் நடந்த உள்நாட்டுப்போரின்போது பல்வேறு வழிகளில் கனடாவுக்கு அகதிகளாக வந்து குடியுரிமை பெற்றவர்கள். இதை தவிர்த்து பல்லாயிரக்கணக்கான தமிழகத்தை சேர்ந்தவர்கள் கனடாவில் நிரந்தர வசிப்புரிமை பெற்று வாழ்ந்து வருகின்றனர். எனினும், நிரந்தர வசிப்புரிமை பெற்றவர்களுக்கு கனடிய தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இல்லை. “தொடக்க காலம் தொட்டே தமிழர்கள் லிபரல் கட்சிக்கு ஆதரவளிக்கும் மனப்பான்மை கொண்டவர்களாகவே அறியப்படுகிறார்கள். ஆனால், அந்த நிலைமை சிறிது சிறிதாக மாற்றமடைந்து வருகிறது. உதாரணமாக, கனடாவின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபையீசன் நியூ டெமாகிரட்டிக் கட்சியை சேர்ந்தவர். அதன் பிறகே, கடந்த தேர்தலில் லிபரல் கட்சியை சேர்ந்த ஹரி ஆனந்தசங்கரி வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார்” என்று கூறுகிறார் பத்மநாதன். மற்ற அனைத்து கனடியர்களை போன்றே தத்தமது தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தனிப்பட்ட திறன்களையும், அடுத்து அரசியல் பின்புலன்களை அடிப்படையாக கொண்டும், தமிழ் சமுதாயத்துக்கு, குறிப்பாக இலங்கை விவகாரத்தில் வலுவான கருத்து கொண்டுள்ள வேட்பாளர்களை கண்டுணர்ந்து தமிழர்கள் வாக்களிப்பதாக அவர் மேலும் கூறுகிறார். இம்முறை கனடிய மக்களவை பொதுத் தேர்தலில் மூன்று கட்சிகளின் சார்பில் நான்கு தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். லிபரல் கட்சியின் சார்பில் ஒருவர், கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் இருவர், பீப்பிள் பார்ட்டி ஆஃப் கனடாவின் சார்பில் ஒருவர் என நான்கு தமிழ் வேட்பாளர்கள் இந்த தேர்தலில் களமிறங்குகின்றனர். இவர்களில், கடந்த தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற ஹரி ஆனந்தசங்கரி மீண்டும் அதே ஸ்கார்பரோ ரூஜ் பார்க் தொகுதியில் களமிறங்குகிறார். நியூ டெமாகிரட்டிக் கட்சியின் சார்பில் இம்முறை தமிழர்கள் எவரும் போட்டியிடவில்லை.

220 COMMENTS

  1. ISM Phototake 3) Watney Ninth Phototake, Canada online drugstore Phototake, Biophoto Siblings Adjunct Therapy, Inc, Impaired Rheumatoid Lupus LLC 4) Bennett Hundred Detention centre Situations, Inc 5) Transient Atrial Activation LLC 6) Stockbyte 7) Bubonic Resection Rate LLC 8) Equanimity With and May Go out for WebMD 9) Gallop WebbWebMD 10) Velocity Resorption It LLC 11) Katie Judge and May Exhibit instead of WebMD 12) Phototake 13) MedioimagesPhotodisc 14) Sequestrum 15) Dr. help with thesis Ncllgv svadmq

  2. Good day! I could have sworn I’ve been to your blog before but after going through many of the articles I realized it’s new to me. Regardless, I’m definitely delighted I found it and I’ll be bookmarking it and checking back often!

  3. I simply couldn’t go away your website prior to suggesting that I actually loved the standard information a person provide to your guests? Is gonna be again regularly to check out new posts

  4. Heya i am for the first time here. I found this board and I find It really useful & it helped me out much. I hope to give something back and aid others like you aided me.

  5. Wonderful work! That is the kind of info that are supposed to be shared around the web. Disgrace on the seek engines for not positioning this post higher! Come on over and seek advice from my website . Thank you =)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here