ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம்; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

115
396

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாராவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாராவில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அந்த பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதனை தொடர்ந்து பதிலடி தரும்வகையில் பாதுகாப்பு படையினரும் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், கர்னல், 2 ராணுவ வீரர்கள் உட்பட 4 பேர் வீரமரணமடைந்துள்ளனர். பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நேற்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள தங்கர் போரா பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

115 COMMENTS

  1. Does your site have a contact page? I’m having trouble locating it but, I’d like to shoot you an email. I’ve got some suggestions for your blog you might be interested in hearing. Either way, great website and I look forward to seeing it develop over time.

  2. Howdy just wanted to give you a quick heads up. The text in your article seem to be running off the screen in Opera. I’m not sure if this is a format issue or something to do with internet browser compatibility but I thought I’d post to let you know. The design and style look great though! Hope you get the problem solved soon. Kudos

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here