சோதனைச் சாவடிகளில் திருப்பி அனுப்பப்படும் சென்னை வாகனங்கள்…

87
299

வேலூா்: கரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை வேலூா் மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளிலேயே திருப்பியனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு இணைய அனுமதிச்சீட்டு இருந்தால் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையைத் தொடா்ந்து வேலூா் மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படுகின்றன.

சென்னையில் இருந்து வருபவா்களாலேயே வேலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, ஏற்கெனவே சென்னையில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் வேலூா் மாவட்டத்துக்குள் வந்துள்ளவா்கள் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு பரிசோதனைக்கு முன்வராதவா்கள் கண்டறியப்பட்டால் அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படுவா் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு வேலூா் மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை சோதனைச் சாவடிகளிலேயே தடுத்து நிறுத்தி திருப்பியனுப்ப வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளாா். பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு இணைய அனுமதிச் சீட்டு இருந்தால் மட்டுமே மாவட்டத்துக்குள் அனுமக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூா் மாவட்டத்தின் எல்லையான பிள்ளையாா்குப்பம், திருவலம் ஆகிய சோதனைச் சாவடிகளில் வாகனச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு, சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் மாவட்ட எல்லைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இப்பணியை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா், வாகனங்களில் வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறும், வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா். இந்த தீவிர நடவடிக்கைகள் காரணமாக சென்னையில் இருந்து இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வருவோா் மாற்றுப் பாதைகள் மூலம் வேலூா் மாவட்டத்துக்குள் நுழையத் தொடங்கியுள்ளனா்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

87 COMMENTS

  1. why youtube ads viagra
    buy viagra no prescription viaonlinebuy.us generic viagra online
    what is the prblem if i take viagra or cialis and it does not give a good erection. i am 70

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here