சென்னையில் பிரபல துணிக்கடை உரிமையாளர் குடும்பத்தில் 20 பேருக்கு கொரோனா… 2 பேர் பலி.!

0
64

சென்னையில் ஜவுளிக்கடை உரிமையாளரின் குடும்பத்தில் உள்ள 20 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் சென்னை கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. அண்மையில் ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகளை தொடர்ந்து பாண்டிபஜாரில் உள்ள பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் ஒருவர் தனது கடையை 4 நாட்கள் திறந்து வைத்துள்ளார்.

அப்போது, கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் மூலம் உரிமையாளருக்கு கொரோனா பரவியுள்ளது. இதனையடுத்து, அவரிடம் இருந்து அவரது மனைவிக்கும், 3 மகன்களுக்கும், மருமகள்களுக்கும், பேரக்குழந்தைகள் என ஒரே வீட்டில் மொத்தம் 20 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, கடையின் உரிமையாளர் மற்றும் மனைவிக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து அவர்கள் தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குடும்பத்தில் இருந்த மற்றவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடை உரிமையாளரின் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

2வதாக 42 வயதுடைய அவரது மகன் வீட்டிலேயே மூச்சுதிணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தற்போது 75 வயதான ஜவுளிக்கடை உரிமையாளரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே குடும்பத்தில் உள்ள 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here