சுட்ட கதைக்கு ஆஸ்கர் விருதா – கொதிக்கும் விஜய் ரசிகர்கள்

33
299

விஜய் நடித்த மின்சாரக்கண்ணா படத்தின் கதையை சுட்டு எடுத்த படம் தான்6 ஆஸ்கர் விருதுகளை வென்ற “பாரசைட் ” திரைப்படம் என்று கொதிக்கிறாரகள் விஜய் ரசிகர்கள்.

திரைப்பட உலகில் அதிக மதிப்புடன் விளங்கும் விருதுகளில் ஆஸ்கார் விருதுகளும் ஒன்று. 2020ம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கார் விருதுகளை குவித்தது Parasite என்னும் கொரியன் திரைப்படம்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

பொதுவாக கொரியன் படத்தை சுட்டு நம்மவர்கள் படம் எடுப்பார்கள். ஆனால் தற்போது தமில் படத்தை சுட்டு கொரியர்கள் படம் எடுத்துள்ளனர். அதுவும் 6 ஆஸ்கர் விருதுகளையும் வென்றுள்ளது. 6 ஆஸ்கார் விருதுகளை வென்று குவித்த இந்த ‘பாரசைட்’ படத்தின் கதை, 1999ம் ஆண்டு ‘இளைய தளபதி’ விஜய் நடித்து வெளியான ‘மின்சார கண்ணா’ படத்தின் கதையை போல உள்ளது என்று சிலர் சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கின்றனர்.

மின்சாரகண்ணா படத்தில், தனது காதலியை மணந்து கொள்வதற்காக பெரிய பணக்காரரான விஜயும் அவரது குடும்பத்தினரும் அந்த பெண்ணின் வீட்டில் ஏழை தொழிலாளிகளை போல நடிப்பார்கள். மேலும் தாங்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்று யாரும் கண்டுகொள்ளாதவாறு நடந்துகொள்வர். இந்நிலையில் ‘பாரசைட்’ படத்தில் பணக்காரர் ஒருவர் வீட்டில், ஏழை குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகன் மற்றும் மகள் என்று அனைவரும் தாங்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று யாருக்கும் தெரிவிக்காமல், அந்த வீட்டில் இருக்கும் அந்த பணக்காரரை சார்ந்து வாழ்வது போல கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. ஆகையால் இந்த கதைக்களம் ‘மின்சார கண்ணா’ படத்தின் கதையை தழுவி உள்ளது என்று சிலர் கூறிவருகின்றனர்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

33 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here