சீமான் நிகழ்ச்சி ரத்தா? – கொதிக்கும் மாணவர்கள் – அதிர்ச்சியில் காங்கிரஸ்

66
8249

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறித்தவ கல்லூரியின் ஆண்டுவிழாவில் சீமான் வரவிருக்கும் நிகழ்வை ரத்து செய்ய போவதாக வரும் செய்தியை கேட்டு மாணவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். நிகழ்ச்சியை ரத்து செய்தால் நாங்கள் கல்லூரிக்கு வெளியே நடத்துவோம் என்று மாணவர்கள் அறிவித்து உள்ளனர். இதனால் காங்கிரஸ் பதட்டமடைந்து உள்ளது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறித்தவ கல்லூரியின் ஆண்டுவிழா இந்த மாதம் பெப்ருவரி 29ம் தேதி நடக்கிறது. இதற்கு சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அழைப்பு விடுத்தனர் மாணவ அமைப்பினர். சீமானும் மாணவர்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக சொன்னார்.

இதை அறிந்த குமரி காங்கிரசின் ஒரு பிரிவினர் பதட்டம் அடைந்தனர். காரணம் சமீப காலமாக சீமான் கல்லூரி விழாக்களில் மாணவர்கள் மத்தியில் தூய அரசியல் குறித்து பேசி வருகிறார். இதனால் மாணவர்களிடையே சீமானின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் இல்லாமல் நாம் தமிழர் கட்சி தனது முதல் வெற்றியை குமரி மாவட்டத்தில் தான் பதிவு செய்தது. இது ஊழலில் திளைக்கும் குமரி மாவட்ட காங்கிரஸாரை பதட்டம் அடைய வைத்தது.

அதனால் கல்லூரி விழாவில் சீமான் பங்கேற்க இருப்பதை அறிந்த காங்கிரஸ் காரர்களின் தூக்கம் தொலைந்தது. இதை அடுத்து சிஎஸ்ஐ குமரி பேராயத்தின் ஆயர் செல்லையா அவர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அதனால் ஆயர் அவர்கள் வேறு வழியின்றி கல்லூரி முதல்வரை நெருக்குவதாக தகவல்கள் வருகிறது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

ஆனால் கல்லூரி முதல்வரோ, நிகழ்ச்சியில் பங்கேற்க கல்லூரி சார்பில் சீமானுக்கு கோரிக்கை மனு அனுப்ப பட்டுள்ளது. ஆனால் அன்றைய தினம் சீமான் அவர்கள் வேறு ஒரு நிகழ்வில் பங்கேற்க இருப்பதால், கல்லூரி நிகழ்வில் பங்கேற்பது குறித்து இன்னும் உறுதி அளிக்கவில்லை என்று தெரிவித்து உள்ளார்.

ஆனால் சீமான் நிகழ்வை ரத்து செய்ய போவதாக வரும் தகவல்களை கேட்ட மாணவர்கள் கொதித்து போய் உள்ளனர். கல்லூரி அனுமதி தராவிட்டால் நாங்கள் நிகழ்ச்சியை கல்லூரிக்கு வெளியில் வைத்து நடத்துவோம் என்று அறிவித்து உள்ளனர். இது காங்கிரஸரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சீமான் நிகழ்வை காங்கிரஸ் தடுக்கப்போய் அது சீமானுக்கு சாதகமாக போனதை கண்ட பொதுமக்கள் காங்கிரஸ் கட்சியை பரிதாபத்துடன் பார்க்கின்றனர்.

2014ம் ஆண்டு ஆற்றூரில் நடந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்ட மேடையை காங்கிரசார் உடைக்க சென்ற போது நடந்த பிரச்சனையில் பல காங்கிரசார் தலை தெறிக்க ஓடி தப்பித்தனர் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

66 COMMENTS

  1. I am the student of this college , many students dont like seeman , in the reason of he is taking at nanguneri rajivgandhi death issue.

  2. seeman only taking sectarianism, kanyakumari, nilgiris, krishnagiri, coimbatore ,tenkasi , theni these people are mixed language people , so avoid seeman in campus.

  3. 2014 il nam tamilar medai udaikum pothu odiyathu seeman party members than nan athai parthaen …. minnal news fraud news….ipadi wrong news podutharku pathila pitchai edukalam..

  4. நடிகர்கள் வந்தால் வரவேற்க்கும் மனிதர்… சிறந்த தலைவரை புறைகணிப்பதுஏனோ

  5. இவரும் நடிகர் தான்..சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் கொள்கையை பரப்பினார்…பின்னர் தற்போது பா.ம.க வின் கொள்கையை பரப்பி கொண்டு இருக்கிறார்…விரைவில் காவிகளின் கொள்கையை பரப்புவார்…

  6. மாணவர்கள் எதிர்பால் தான் நிகழ்ச்சி ரத்தாம் பொய் செய்தி பரப்ப வேண்டாம்

  7. தவறான தகவல் மணவர்களை தீவிரவாதியாக்கும் பிரிவினைவாத சைமனை குமரி மாவட்டத்தில் மக்கள் ஏற்கவில்லை… என்பதே உண்மை…

  8. நிகழ்ச்சி ரத்து செய்தது கல்லூரியின் தனிப்பட்ட முடிவு. ஆனால் இளம் தலைமுறையினரிடம் தெளிவான அரசியலை கொண்டு செல்லும் பணியினை திரு.சீமான் சிறப்பாக செய்கிறார் என்பது தவிர்க்க முடியாத உண்மை..

  9. இந்த காங்கிரஸ் கட்சிக்கு வேற வேலை யே இல்லையா எவன்வந்தா உனக்கு என்ன பிரச்சனை .கருமம் பிடிச்சபயலுவ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here