சீன ஆக்கிரமிப்பை தடுக்க லடாக் எல்லையில் சிறப்பு மலை பாதுகாப்பு அதிரடி படை குவிப்பு

0
24

லடாக் எல்லையில் சீன வீரர்கள் ஊடுருவினால் தகுந்த பதிலடி கொடுக்க, சிறப்பு மலை பாதுகாப்பு அதிரடி படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் திடீரென சீன வீரர்கள் தாக்கியதில் கர்னல் சந்தோஷ் பாபு, தமிழகத்தை சேர்ந்த வீரர் பழனி உட்பட 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த பின்னணியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டெல்லியில் நேற்றுமுன்தினம் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சீன வீரர்கள் அத்துமீறினால், தகுந்த பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், லடாக்கின் எல்லைப் பகுதியில் சிறப்பு மலை பாதுகாப்பு அதிரடி படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் உயர்ந்த மலைப் பகுதிகளில் திறமையாக போரிடும் வல்லமைப் படைத்தவர்கள். குறிப்பாக கொரில்லா போரில் வல்லவர்கள். உயர்ந்த மலை சிகரங்கள், பனிப்பொழிவு போன்ற எந்த சூழ்நிலையிலும் அசாத்திய துணிச்சலுடன் போரிடக் கூடியவர்கள். மலைப் பகுதிகளில் எப்படி எல்லாம் சவால்கள் உள்ளன. அந்த பகுதிகளில் எப்படி போரிட வேண்டும் என்று பல ஆண்டுகள் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள், தற்போது லடாக்கில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் உடனுக்குடன் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here