சீனாவின் வுஹான் நகரிலிருந்து காணாமல் போன பத்திரிகையாளர் – புதிய காணொளி வெளியீடு

0
67

சீனா: கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து செய்தி சேகரித்து வெளியிட்ட பிறகு காணாமல் போன செய்தியாளர் ஒருவர்,சுமார் இரண்டு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் காணொளி வாயிலாக தனது இருப்பை உறுதி செய்துள்ளார்.

கடைசியாக கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி, லி ஸிஹுவா வெளியிட்ட காணொளியில் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்படுவது பதிவாகி இருந்தது.

இந்நிலையில், தற்போது புதிதாக யூடியூபில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தான் இடைப்பட்ட காலத்தில் வுஹான் நகரத்திலும், தனது சொந்த ஊரிலும் என இருமுறை “சுய தனிமைப்படுத்தலில்” இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இவர் வுஹான் நகரத்திற்கு, சீன அரசு உண்மையான நோய்த்தொற்று எண்ணிக்கையை மறைப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்தும், பரபரப்பாக இயங்கி வரும் தகன மேடைகள் குறித்தும் வெளியிட்ட பல்வேறு செய்தி காணொளிகள் யூடியூப் மற்றும் ட்விட்டரில் வெளி வந்து பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

லி மாயமாவதற்கு முன்பு வுஹான் நகரத்தில் காணாமல் போன மற்றொரு செய்தியாளரான சென் கியூஷி குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. அவர் காணாமல் போய் 75 நாட்களுக்கு மேலாகிறது.

இவர்கள் இருவருக்கும் முன்னர் பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் வுஹான் நகரத்திலிருந்து மாயமான மற்றொரு செய்தியாளரான ஃபாங் பின் குறித்தும் இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here