‘சியட்’ டயர் தொழிற்சாலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

0
71

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கண்ணன்தாங்கல் கிராமத்தில் சுமார் 165 ஏக்கரில் ‘சியட்’ நிறுவனத்தின் புதிய டயர் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதை இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

பின்னர் விழாவில் பேசிய முதலமைசர்:

சர்வதேச தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ந் தேதி எனது முன்னிலையில் போடப்பட்டது. ஒப்பந்தம் போட்ட 18 மாதங்களில் உத்தரவாதம் அளித்த மொத்த முதலீடான ரூ.4 ஆயிரம் கோடியில், முதற்கட்டமாக ரூ.1,400 கோடி முதலீடு செய்து முழு அளவிலான வணிக உற்பத்தியை சியட் நிறுவனம் தொடங்கி இருக்கிறது.

இருசக்கர வாகனங்கள் முதல் போர் விமானங்கள் வரை அனைத்து வகை பயன்பாட்டிற்குமான டயர்களும் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்திலே பகிர்ந்துகொள்கின்றேன்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் பச்சை வகைப்பாடு என்று வகைப்படுத்தப்பட்டுள்ள தொழிற்சாலைகள், தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், அதிக வேலைவாய்ப்பு வழங்கும் தொழிற்சாலைகளை ஊக்குவிக்க, சிறப்பான சலுகைகளை என்னுடைய அரசு வழங்கி வருகிறது.

ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்கும் மாபெரும் சக்தி உடைய ஒரு மாநிலம் என்று சொன்னால், தமிழ்நாடு தான் என்று இந்த நேரத்திலே தெரிவிக்க விரும்புகின்றேன்.

இந்த தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் கார் டயர் உற்பத்தி செய்யப்படும் என்றும், இங்கு பணிபுரிகின்றவர்களில் 40 சதவீதம் பேர் பெண்கள் என்றும் சியட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஆனந்த் கோயங்கோ தெரிவித்தார். இந்த தொழிற்சாலைக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் தமிழ்நாடு அரசு வழங்கும்.

இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், ‘சியட்’ லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஆனந்த் கோயங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Minnal News App டவுன்லோட் செய்து அனைத்து நிகழ்வுகளையும் உங்களது மொபைலில் நொடியில் படியுங்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.cruzbytes.minnalnews

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here